பழனிமலை முருகன் கோயிலில் இரவில் நடக்கும் அதிசயங்கள்
முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி மலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.முருகப்பெருமானை வழிபட்டு வர வாழ்க்கையில் ஒரு மிக பெரிய திருப்பம் அமைவதை பார்க்க முடியும்.முருக பெருமான் பழனி மலையில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் பல அதிசயங்கள் நிகழ்வதாக சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம். பழனி மலையில் வீற்றியிருக்கும் முருகப்பெருமான் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தில் உருவாக்கப்பட்ட அற்புதான சிலை ஆகும்.
அதாவது ஒன்பது வகையான விஷங்களை சரியான விகிதத்தில் கலந்து அத்துடன் மூலிகைகள் சேர்த்து செய்யப்பட்ட விஷேசமான சிலை ஆகும்.இத்தனை சிறப்புவாய்ந்த முருகப்பெருமானுக்கு ஒருநாளைக்கு ஆறு முறை அபிஷேகம் நடத்தப்படுகிறது.
மேலும்,விக்ரஹத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்களான நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த விக்ரஹம் மிகவும் சூடாக இருக்கும் என்றும் அதில் இருந்து இரவு வேளையில் நீர் வெளிப்படும் என்று கூறப்படுகிறது.
இத்தனை அற்புதமான சிலையை வடிவம் செய்ய போகர் அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களின் உத்தரவிற்கு பிறகுதான் செய்யத்தொடங்கினார் என்று சொல்லப்படுகிறது.மேலும்,போகர் இந்த சிலையை வடிவமைக்க சுமார் 9 கால வருடம் எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களில் சென்று தேர்வு செய்து 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொல்படி தயார் செய்தனர். பழனி மலையில் இரண்டு மரகதலிங்கம் உள்ளது.ஒன்று முருகப்பெருமான் சன்னதியிலும் மற்றொன்று போகர் சமாதியின் மீதும் உள்ளது.
மேலும் இரவில் பழனி மலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் மிக பெரிய அதிசயம் நடக்கிறது.அதாவது எப்பொழுதும் இரவு பூஜை முடிந்ததும் முருகனின் நவபாஷாண சிலைக்கு சந்தனங்களை பூசுவார்கள்.
மறுநாள் காலையில் அந்த சந்தனத்தை எடுக்கும் பொழுது அவை பச்சை நிற சிலை காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது.இத்தனை அதிசயங்கள் நிறைந்த சிலையை உருவாக்கிய போகர் ஆதிகாலத்தில் எத்தனை அதிசயங்கள் இன்னும் நிகழ்த்திருப்பார் நம்மால் உணரமுடிகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |