இன்று 2025-ன் கடைசி பிரதோஷம்: இந்த 3 விஷயங்கள் செய்தால் ராஜ யோகம் நிச்சயம்
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் சிவவழிபாட்டிற்கு உரிய முக்கிய நாளாகும். மேலும்,தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரு முறை பிரதோஷம் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளில் நாம் விரதம் இருந்து சிவ பக்தியோடு சிவபெருமானை சரணம் அடைந்து வழிபாடு செய்யும்பொழுது வாழ்க்கையில் செல்வ வளமும், சிவபெருமானுடைய அருளால் மிகப்பெரிய வளர்ச்சியும், மனதில் நிம்மதியும் கிடைக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கடைசி பிரதோஷம் இன்று டிசம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் நாம் முக்கியமாக மூன்று விஷயங்களை செய்தால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சிவபெருமானின் அருளால் மிகச் சிறப்பாக அமையும் என்று சொல்கிறார்கள்.
அதோடு, மார்கழி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷம் என்பதால் இந்த நாளில் வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அப்படியாக, இன்று செய்ய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1. இவ்வாறான முக்கியமான நாளில் அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை உடைத்துக் கொண்டு மனதில் பக்தி நிறைய விரதத்தை துவங்க வேண்டும். பிறகு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனைக் கொண்டு வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கோ அல்லது அருகில் இருக்கக்கூடிய கோவிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கோ அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கூடுதலாக அந்த தண்ணீரில் சிறிதளவு எள் கலந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சிவபெருமானுடைய முழு அருளும் நமக்கு கிடைப்பதாக நம்பிக்கை.
2. இன்றைய நாளில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வில்வ இலை எடுத்துக் கொண்டு அதில் "ஸ்ரீராமஜெயம்" எழுதி பிறகு அந்த இலையை கொண்டு சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் வேண்டிய விருப்பங்கள் விரைவில் நிறைவேறும்.
அதோடு பிரதோஷ நேரத்தில் பஞ்ச உபசார பூஜை செய்து வழிபாடு செய்வது நமக்கு மேன்மையை பெற்றுக் கொடுக்கும். அதாவது சந்தனம்(நிலம் ) சாத்துதல், பூக்கள் தூவுதல்(வானம்) தூபம் காட்டுதல்( காற்று) தீபம் காட்டுதல்(நெருப்பு) மற்றும் நெய்வேத்தியம்(நீர்) படைத்தல் ஆகிவற்றை இவை பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையாக வைத்து செய்யக்கூடிய ஒரு பூஜையாகும். இதை செய்தால் நிச்சயம் சிவன் அருளோடு சேர்த்து பஞ்சபூத அருள் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

3. பிரதோஷ வேளையில் நம்முடைய மனமானது சிவபெருமானை நினைத்தபடி மட்டுமே இருக்க வேண்டும். ஆக பிரதோஷ நேரங்களில் சிவாமந்திரங்களை மனமுருகி பாராயணம் செய்வது என்பது நிச்சயம் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். இங்கு நல்ல மாற்றம் என்பது சிவபெருமான் நம்மை ஆட்கொண்டு இந்த பூலோக வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விஷயங்களும் நமக்கு அவர் தந்தருள்வார்.
ஆதலால் இந்த ஆண்டிற்குரிய கடைசி பிரதோஷ தினத்தை மனதார வழிபாடு செய்து வருகின்ற 2026 நாள் மிகச் சிறப்பாக அமைய சிவபெருமானை சரணடைந்து அவருடைய அருளைப் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |