ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டிய மாசி மகம் புனித நீராடல்
தமிழ் மாதங்களில் 12 மாதங்களும் மிகவும் விஷேசம் நிறைந்த மாதமாகும். அப்படியாக அதில் மாசி மாதம் மிகவும் மகத்தான மாதமாக கருதப்படுகிறது. காரணம், மாசியில் தான் மஹாசிவராத்திரி வெகு விஷேசமாக நடைபெறும்.
அதே போல் மாசி மகம் அன்று புனித தீர்த்தங்களில் நீராடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பலரும் புனித தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய பாவங்களை கழித்து, விருப்பங்களை நிறைவேற்றி கொள்வார்கள்.
அப்படியாக, மாசி மகம் அன்று சென்னையில் மெரினா கடற்கரையில் சைவம் வைணவ என்று அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி கடலில் நீராடும் வைபவம் நடந்தது. அதில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், அந்த புனித நீராடலில் நாம் கலந்து கொள்வதால் நம்முடைய வாழ்க்கையில் எண்ணற்ற மகிழ்ச்சியை பெறமுடியும் என்று மக்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பல வருடமாக இந்த புனித நீராடலில் கலந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றம் அடைந்தாரகள் என்று பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதை பற்றி நாம் விரிவாக தெரிந்து கொள்ள இந்த காணொளியை பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |