திருவாதிரை விரதத்தை எப்பொழுது தொடங்க வேண்டும்?
சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது திருவாதிரை விரதம் ஆகும்.இந்த விரதத்தை ஆதிரை விரதம், மாங்கல்ய விரதம், ஆருத்ரா விரதம் என்று பல பெயர்களில் பலரும் சொல்வார்கள்.
இந்த விரதம் வருடத்திற்கு ஒருமுறை மார்கழி மாதத்தில் வரக்கூடிய அற்புத விரதம் ஆகும்.அதாவது திருவாதிரை நட்சத்திரமும், மார்கழி பௌர்ணமியும் ஒன்றாக சேர்ந்து வரக்கூடிய அந்த நேரத்தில் இந்த வழிபாட்டை அனைத்து சிவாலயங்களிலும் செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக நடராஜருக்கு அபிஷேகம் ஆராதனை போன்றவை அனைத்தும் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவாதிரை நட்சத்திர நாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.அதை பற்றி பார்ப்போம்.
இந்த விரதத்தை பெண்கள் கடைபிடிப்பதால் குடும்பத்தில் அவர்கள் ஒற்றுமை உண்டாகும்.கணவன் மற்றும் பிள்ளைகள் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.திருவாதிரை நட்சத்திரம் என்பது ஜனவரி மாதம் 12ஆம் தேதி காலை 11:47க்கு தொடங்கி ஜனவரி மாதம் 13ஆம் தேதி காலை 11:24 வரை இருக்கிறது.
மேலும்,பௌர்ணமி என்பது 13-ஆம் தேதி முழுவதும் இருக்கிறது என்பதால் சிதம்பரம் கோவிலில் நடராஜருக்கு காலை 3 மணியிலிருந்து 6 மணி வரை அபிஷேகம் என்பது நடைபெறும். இந்த அபிஷேகம் சிதம்பரம் மட்டும் அல்லாமல் நடராஜர் சிலை இருக்கும் எல்லா இடங்களிலும் இந்த பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
அதே போல் திருவாதிரை விரதம் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மதியத்தில் இருந்து விரதம் இருந்து டிசம்பர் மாதம் 13ஆம் தேதி சிவ தரிசனம் செய்துவிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
அதே போல் விரதம் இருப்பவர்கள் விரத நேரத்தில் முழுவதுமாக சிவபெருமானை நினைத்து மந்திரங்கள் சொல்லவேண்டும்.மேலும் இந்த விரதம் பெண்களுக்குரிய விரதம் என்பதால் பெண்கள் அன்றைய தினத்தில் தங்களுடைய தாலி சரடை மாற்றுவார்கள்.
அவ்வாறு தாலி கயிறு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி காலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் அல்லது 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் தாலி சரளை மாற்றலாம். இந்த திருவாதிரை விரதத்தின் மிக மிக்கியமாக ஒன்றாக திருவாதிரை களி உள்ளது.
அதாவது 21 வகையான காய்கறிகளை பயன்படுத்தி அவியல், கூட்டு போன்றவற்றை செய்து வைக்க வேண்டும். ஒரு வேலை 21 காய்கறிகளை பயன்படுத்த செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் ஏழு, மூன்று என்ற எண்ணிக்கையில் காய்கறிகளை வைத்து அவியல், கூட்டு என்று செய்து கொள்ளலாம்.
அதோடு வடை பாயசம் இனிப்பு போன்றவற்றை படைத்து எம்பெருமானை மனதார வழிபாடு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.மேலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கணவனிடம் ஆசீர்வாதம் வாங்குவது அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |