2025 புத்தாண்டு ராசிபலன்:தொட்டது எல்லாம் வெற்றி யாருக்கு?
மக்கள் மிகவும் ஆவலுடன் காத்து இருப்பது புத்தாண்டு வருகைக்காகத்தான்.2024 ஆம் ஆண்டு இனிதே முடிந்து புதிய வருடம் தொடங்க உள்ளது.எல்லோருமே ஒவ்வொரு புத்தாண்டு வருகை அடுத்து மனதில் ஒருவிதமான உற்சாகம் வைத்து காத்திருப்பர்.
நிச்சயம் வருகின்ற புத்தாண்டில் நம்முடைய வாழ்க்கை மாறும் என்ற புத்துணர்ச்சியை எல்லோரிடத்திலும் பார்க்கமுடியும்.அப்படியாக 2025 ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கு உரிய பலன்களும் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளில் நினைய போயிறார்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
வருகின்ற 2025ஆம் ஆண்டு மேஷ ராசியினருக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.கடந்த வருடம் ஏற்பட்ட மனஉளைச்சல் சரி ஆகும்.வியாபாரத்தில் மிக சிறந்த முன்னேற்றத்தை பார்ப்பீர்கள்.உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டு வெற்றி வருடம் ஆகும்.பல வருடம் காத்து இருந்த அதிர்ஷட வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.குடும்பமாக வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவர்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த புத்தாண்டு மன நிம்மதியும் அமைதியும் கொடுக்கும்.எதிர்பாராமல் நடந்த பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.வேலையில் உங்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினர் 2025 ஆம் ஆண்டு எடுத்த காரியங்களில் தூள் கிளப்பப்போகிறார்கள்.ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்களுக்கு இது ஒரு பொற்காலம் ஆகும்.இருந்தாலும் பணத்தை சரியாக கையாளவில்லை நஷ்டம் உண்டாகிவிடும்.வண்டி வாகனங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்.
சிம்மம்:
சிம்மம் ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு ஒரு தரமான வருடமாக அமைய போகிறது.வியாபாரம் வளராது என்று சொன்னவர்கள் முன் வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட போகிறீர்கள்.எதிரிகளை கண்டு கொண்டு அதற்க்கு ஏற்ப செயல் படுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்கு 2025 ஆம் ஆண்டு வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.பிரிந்து சென்று கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்கள்.இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசிக்கு வருகின்ற புத்தாண்டு அமோகமாக அமைய போகிறது.கேது பகவானிடம் இருந்து நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்.அதனால் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும்.சுற்றத்தாரை புரிந்து கொள்வீர்கள்.மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகக்கூடும் அதனால் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு இந்த 2025 ஆம் ஆண்டு நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கக்கூடும். பல்வேறு விதமான நன்மைகள் நடக்கும் புதிய முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்ற தரும்.
தனுசு:
தனுசு ராசிக்கு இந்த புத்தாண்டு 2025 நீங்கள் நினைத்ததை எல்லாம் நடக்க செய்யப்போகிறது.இறை வழிபாட்டின் மீது நாட்டம் அதிகரிக்கும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும்.குழந்தைகள் உங்கள் மீது அக்கறையாக இருப்பார்கள்.மன அமைதி கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலமையான பலன்கள் கிடைக்கக்கூடும். குறிப்பாக குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் சமநிலையாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நீண்ட வருடம் கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.நீங்கள் எதிர்பார்த்த வரன் அமையும்.குடும்பத்தில் சந்தோசம் நிம்மதி நிலவும்.தொழில் ரீதியாக சிறந்த முன்னேற்றம் உருவாகும்.நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு வருமானத்தில் எந்த தடையும் இல்லை என்றாலும் குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும்.தேவை இல்லாத வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.யார் எப்படி பட்ட நபர்கள் என்று அடையாளம் கண்டுகொள்வீர்கள்.சொத்து சம்பந்தமான பிரச்னை விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |