நினைத்தது நடக்க நவம்பர் 3 இந்த வழிபாடு செய்ய மறக்காதீர்கள்
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக திங்கட்கிழமை இருக்கிறது. அதிலும் திங்கட்கிழமை வரக்கூடிய சோமவார பிரதோஷம் எப்பொழுதும் தனி சிறப்புகளைக் கொண்டு அற்புதமான பலன்களை கொடுக்க கூடியது.
எவர் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் பிறப்பின் ரகசியத்தை தேட விரும்புகிறார்களோ அவர்கள் கட்டாயம் சிவபெருமானை சரணடைந்தால் அவர்கள் பிறப்பின் அர்த்தத்தை உணர்வதோடு அவர்கள் மோட்சத்தை அடைவதற்கான வழி பாதையை சிவன் பெருமான் அவர்களுக்கு அருள் செய்வார்.
அந்த வகையில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி சிவ பக்தர்கள் அனைவரும் கட்டாயம் இந்த நாளில் வழிபாடு செய்து சிவனை சரணடைந்தால் அவர்களுக்கு பல நன்மைகள் நடக்கும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். இந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி சிவபெருமானுக்கு மிகவும் உகந்த சோமவார பிரதோஷம் வருகிறது.

அதிலும் ஐப்பசி மாத சோமவாரம் பிரதோஷம் மிகவும் விசேஷமாகும். காரணம் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகத்திற்கு முன்பு வரும் சோமவார பிரதோஷம் என்பதால் இது கூடுதல் சிறப்பை பெற்று வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக இருக்கிறது.
இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால் ரேவதி நட்சத்திரமும் அந்த நாளில் அமைந்துள்ளதால் அவை இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. பொதுவாக ரேவதி நட்சத்திரத்தில் செய்யப்படும் வழிபாடுகள் நம்முடைய பாவங்கள் துன்பங்கள் இவை எல்லாம் போக்கி நாம் நினைத்ததை அடையக்கூடிய பாக்கியத்தை கொடுக்கும்.
மேலும் சிவபெருமான் வழிபாடுகளில் சனி பிரதோஷத்திற்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றால் இந்த சோமவார பிரதோஷம் தான். சோமன் என்றால் சந்திரனை குறிப்பதாகும்.
சிவபெருமான் தலையில் சூடிக்கொள்ளும் பெரும் பாக்கியத்தை பெற்ற சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமைகள் வருவதால் திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோஷத்திற்கு சோமவார பிரதோஷம் என்ற பெயர் பெற்றது.
ஜோதிடத்தில் சந்திர பாகவான் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார். சந்திரன் தான் ஒருவர் ஜாதகத்தில் அவருடைய தாயை குறிக்கக் கூடியவர். அதோடு சந்திரன் தான் ஒருவருடைய மனநிலையை குறிக்கக் கூடியவராக இருக்கிறார்.

ஆதலால் எவர் ஒருவர் மன குழப்பங்களால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து நிம்மதியை இழந்திருக்கிறார்களோ அவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு சந்திர பகவானால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
மேலும் நவம்பர் 3 சோமவார பிரதோஷ நாளன்று மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையிலான பிரதோஷ வேளையில் நந்தி பகவானுக்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அருகம்புல் சாற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் பல துன்பங்கள் தீரும்.
அதோடு அன்றைய தினம் மௌன விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். மௌன விரதம் இருக்கும் பொழுது மனதில் "ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தை தொடர்ந்து அவர்கள் பாராயணம் செய்து மனதை சிவன் மீது செலுத்தி வழிபாடு செய்யும்பொழுது அவர்கள் வாழ்க்கை மிகப் பிரகாசமான பாதையை நோக்கி செல்லும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |