இன்னும் 13 நாட்களில் இந்த 3 ராசியினர் செல்வ செழிப்போடு வாழப்போகிறார்களாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் இடத்தை அவர்கள் குறிப்பிட்ட சில கால நேரத்தில் மாற்றி கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றம் ஜோதிடத்தில் மிக பெரிய தாக்கத்தை உண்டு செய்யும். மேலும், நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அப்படியாக, சனி பகவான் வக்ர நிலையில் அவரின் சொந்த ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கிறார். அதோடு சனி பகவான் மீன ராசியில் அடுத்த இரண்டரை காலம் இருக்க போகிறார். இந்த மாற்றம் ஒரு சிலருக்கு அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய அளவில் தாக்கத்தை கொடுத்து முன்னேற்றம் அளிக்க போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மீனம்:
மீன ராசியினருக்கு சனியின் இந்த மாற்றம் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக மிக பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது. நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய அற்புதமான கால கட்டம் ஆகும். சமுதாயத்தில் இழந்த மதிப்புகளை மீண்டும் பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். குலதெய்வத்தின் முழு அருள் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு சனி பகவானின் இந்த மாற்றம் அவர்களுடைய பண பிரச்சனையில் இருந்து விடுதலை பெற உதவியாக இருக்க போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் இவர்களுக்கு சாதகமாக அமையும். வாழ்க்கை துணையால் சந்தித்த சங்கடங்கள் எல்லாம் விலகி அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உருவாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சனி பகவானின் இந்த மாற்றம் தொழில் வாழ்க்கையில் அவர்களை மிக பெரிய உயரத்திற்கு எடுத்து செல்ல போகிறது. நினைத்த இடத்தில் இவர்களுக்கு வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். வழக்கு விஷயங்கள் எல்லாம் இவர்களுக்கு சாதகமாக அமையக்கூடிய அற்புதமான கால கட்டம் ஆகும். வங்கி தொடர்பான விஷயங்கள் இவர்களுக்கு மிக பெரிய அளவில் சாதகமாக நிலையை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |