ராஜ வாழ்க்கை வாழ சாணக்கியர் சொல்லும் 7 முக்கியமான வழிகள்
மனிதர்களாகிய நம்மில் எல்லோருக்கும் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். இந்த ராஜ வாழ்க்கை என்பது அரண்மனையில் வாழக்கூடிய ஒரு வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ராஜ வாழ்க்கை என்பது நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை தான் பல நேரங்களில் குறிக்கிறது.
மேலும், ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்கிறான் என்றால் உண்மையில் அவன் தான் இந்த உலகில் மிக உயர்ந்த வெற்றியாளர். அவ்வாறு வாழக்கூடிய பக்குவத்தை அவனுக்கு காலத்தால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும். அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற பாடங்கள் தான் அவனை அவனுடைய உலகத்தில் ராஜாவாக வாழ வைக்கக்கூடிய ஒரு தன்மையை கொடுக்கிறது. அப்படியாக வரலாறுகளில் சாணக்கியர் ஒரு மிகச்சிறந்த தத்துவ ஞானி ஆக இருக்கிறார்.
அவர் நமக்கு கொடுத்த தத்துவங்கள் அனைத்தும் நம் நடைமுறை வாழ்க்கையை நிம்மதியாக வாழவும் வெற்றிகரமான ஒரு நிலைக்கு செல்லவும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் அவர் ஒரு மனிதன் மிகச் சிறந்த ஞானியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் அவன் கடைபிடிக்க வேண்டிய ஒரு ஏழு விஷயங்களை சொல்கிறார் அதை பற்றி பார்ப்போம்.

1. மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் பொறுமை என்ற ஒரு வார்த்தையை பலரும் மறந்து விட்டார்கள். ஆனால் பொறுமையாக ஒருவர் காத்திருந்து செயல்படும் பொழுது அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தினுடைய அருள் கிடைத்து தக்க சமயத்தில் வெற்றியை அவர்கள் தன்வசமாக்கக்கூடிய ஒரு வாய்ப்பை பெறுகிறார்கள்.
2. அதைப்போல் நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தோல்வி என்பது நம்மை துவண்டு போக செய்யக்கூடிய ஒரு அவமானம் அல்ல. தோல்வியின் வழியாக பாடங்களை கற்றுக்கொண்டு மிக உயர்ந்த சிகரத்தை அடைந்து வரலாறுகளை உருவாக்கியவர்கள் ஏராளம். ஆக தோல்வி என்பது ஒரு மனிதனுடைய முடிவு அல்ல அதுதான் அவனை மிக உயரத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு தொடக்கப் பாதையாக எடுத்து கொள்ள வேண்டும்.
3. நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கக் கூடிய ஒரு நிலை இருப்பதில்லை. மனிதர்களுடைய மனம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆக நம்மை சுற்றியுள்ளவர்கள் தங்களுடைய உறவுகளில் மாற்றம் காண்பிக்கிறார்கள் என்றால் அதை அவ்வாறு ஏற்றுக் கொண்டு கடந்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
4. எப்பொழுது நமக்கான நேரத்தை செலவிடுவது என்பது சுயநலம் அல்ல. அவை நம் ஆன்மாவுக்கு கட்டாயமாக தேவைப்படக்கூடிய ஒரு விஷயமாகும். அதாவது நம்முடன் நாம் உரையாடும் பொழுது தான் நம்மை அறிந்து நம்மை இன்னும் மென்மையாக்கி செயல்படக்கூடிய தன்மை பிறக்கும்.

5. பொதுவாகவே மனிதர்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்காமல் நிறைய தேவை இல்லாத விஷயங்கள் அவர்கள் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வார்கள். அதில் முக்கியமானதாக தங்களுடைய நிலையை பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பது. அதாவது ஒருவர் பணக்காரராக இருக்கலாம், ஒருவர் ஏழையாக இருக்கலாம்.
ஆக அந்த பணக்காரனுடைய வாழ்க்கையை பார்த்து நமக்கு இவ்வாறான வாழ்க்கை கிடைக்கவில்லை என்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு அவநிலையை நம்மால் காண முடிகிறது. இங்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பயணத்தில் அனைவரும் வழிப்போக்கர்கள் மட்டுமே. யாருக்கும் எதுவும் நிரந்தரம் அல்ல.
மேலும், நம்முடைய வாழ்க்கை பயணத்தில் நமக்கான சந்தோஷங்களும் வெற்றியும் குவிந்திருக்கலாம். அதை பார்க்க தவறி பிறருடன் நம்முடைய வாழ்க்கை ஒப்பிட்டு அதே நிலையில் இருந்து வருந்தி கொண்டிருக்கும் பொழுது வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு சென்று விடும். இவ்வாறு செய்வதை நாம் தவிர்த்து விட வேண்டும் என்கிறார்.
6. நம் வாழ்க்கையில் எல்லாம் ஒரே மாதிரியான நிலையில் இருப்பதில்லை. சந்தோஷங்களும் துன்பங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆக சிறிய துன்பத்திற்காக நிறைய நேரங்களை செலவழித்து வருந்துவதை காட்டிலும் கிடைத்த சந்தோஷங்களை கிடைத்த நேரத்தில் நினைத்து அதற்காக நாம் நன்றி செலுத்தி வாழ்வதே நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வைக்கக்கூடிய ஒரு நிலையை கொடுக்கும்.
7. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பூமியில் இருக்கக்கூடிய காலம் மிகவும் பொன்னானதாக மற்றும் குறைவாக காலமாகவே இருக்கிறது. அதனால் நமக்கு இருக்கக்கூடிய நேரத்தை நாம் அறிவு ரீதியாக சிந்தித்து செலவழிக்க வேண்டும். நமக்கு என்ன தேவையோ அதை நோக்கி பயணித்து நம் வாழ்க்கையை மேன்மைப்படுத்த வேண்டும். தேவை இல்லாத விஷயங்களில் நம்முடைய நேரத்தை செலவு செய்து நம்முடைய வாழ்க்கையை துன்ப நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |