சூரிய பகவானின் அருளால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள்

By Sakthi Raj Oct 26, 2025 05:47 AM GMT
Report

ஜோதிடத்தில் சூரிய பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். சூரிய பகவான் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் செல்வாக்கும் சமுதாயத்தில் மரியாதையும் உயர்ந்த பதவியும் கிடைத்து அவர்கள் ஒரு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்வார்கள்.

மேலும் அக்டோபர் மாதம் உத்சவ மாதம் என்று சொல்வார்கள். ஜோதிடத்தில் இந்த மாதம் மிக முக்கியமான மாதமாகும் துர்கா பூஜை, காளி பூஜைக்கு பிறகு அக்டோபர் இறுதியில் சத் பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு சத் பூஜையில் ஒரு சிறந்த யோகம் உருவாக உள்ளது. ஜோதிட நாட்காட்டியின் படி சத் பூஜையானது அக்டோபர் 25 சனிக்கிழமை அன்று தொடங்குகிறது.

இந்த நாளில் பத்ரவஸ் யோகாவும் சேர்ந்து உருவாகிறது. அக்டோபர் 27ஆம் தேதி அன்று அதிகண்ட யோகமும், சுகர்ம யோகமும் சேர்ந்து உருவாகின்றன. சுகர்ம யோகா இரவு முழுவதும் நீடிக்கிறது.

இந்த யோகமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் ஒவ்வொரு விதமான தாக்கத்தை கொடுக்கும், அந்த வகையில் இந்த யோகம் குறிப்பிட்ட ஒரு மூன்று ராசிகளுக்கு மிகச்சிறந்த பாக்கியத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

சூரிய பகவானின் அருளால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் | 2025 Oct 27 3 Zodiac Get Blessings From Sun God

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு இந்த யோகமானது அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல நட்பை உருவாக்க செய்யும். இவர்கள் நீண்ட நாட்களாக வியாபாரத்தில் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருப்பார்கள். அந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி இவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கக்கூடும். இவர்கள் திடீரென்று வெற்றியின் உச்சத்தை தொடக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்புகள் அமையப்போகிறது.

மகரம்:

மகர ராசியினருக்கு இந்து யோகமானது அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதத்தில் மக்களுடைய செல்வாக்கை பெற்றுக் கொடுக்கப் போகிறது. இவர்கள் வேலையில் உயர்ந்த பதவியைப் பெறப் போகிறார்கள். நீண்ட நாட்களாக முடிவிற்கு வராத வழக்கு பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும். வாழ்க்கையில் செல்வ செழிப்புகளை சந்தித்து மன மகிழ்ச்சியோடு வாழக்கூடிய ஒரு அற்புதமான நிலை உருவாகும்.

கந்த சஷ்டி: நாளை முருகப்பெருமானுக்கு பிடித்த இந்த நெய்வேத்தியம் படைக்க தவறாதீர்கள்

கந்த சஷ்டி: நாளை முருகப்பெருமானுக்கு பிடித்த இந்த நெய்வேத்தியம் படைக்க தவறாதீர்கள்

கும்பம்:

கும்ப ராசியினருக்கு இந்த யோகமானது அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு முக்கியமான செயல் ஒன்று நடக்க இருக்கிறது. இவர்களுக்கு சூரிய பகவானுடைய முழு ஆசிர்வாதமும் கிடைத்து தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறப் போகிறார்கள். தங்களுடைய வேலையில் அவர்களுக்கு சிக்கல்கள் சந்தித்து கொண்டு இருந்தால் அந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி இவர்களுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்புகள் பிறக்கப் போகிறது.        

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US