புதிய வழியை காட்டும் புதன்- இனி இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்தான்
ஜோதிடத்தில் புதன் பகவான் அருள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. காரணம் புதன் பகவானுடைய ஆசிர்வாதம் இருந்தால் அந்த ஜாதகர் வாழ்வில் மிகப் பெரிய உயரத்தை அடைந்து விடலாம். அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு அதிர்ஷ்ட கதவும் புதன் பகவானால் எப்பொழுதும் திறந்தே இருக்கும்.
அந்த வகையில் 2025 அக்டோபர் 9ஆம் தேதி புதன் பகவான் தனது பெயர்ச்சியை மேற்கொள்ள இருக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு மிக அற்புதமான காலம் ஆரம்பமாகப் போகிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு புதன் பகவானுடைய இந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தெளிவை கொடுத்து முன்னேறி செல்லக்கூடிய பாதையை உருவாக்கப் போகிறது. மேலும் மிதுன ராசியினருக்கு புதன் பகவானுடைய ஆதிக்கம் இருப்பதால் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் படிப்பிலும் பேச்சிலும் சிறந்து விளங்க போகிறார்கள். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக வெளிநாட்டு தொடர்பும் கிடைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.
கன்னி:
புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட கன்னி ராசியினருக்கு புதன் பகவான் உடைய இந்த மாற்றம் அவர்கள் குடும்பத்தில் உள்ள சிக்கல்களை போக்கி மகிழ்ச்சியை கொண்டு வரப் போகிறது. இவர்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் விலகப் போகிறது. அது மட்டுமல்லாமல் நிதி நிலைகளில் இவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றமும் மாணவர்களுக்கு படிப்பு நல்ல தேர்ச்சியும் பெறப்போகிறார்கள். பெண்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியானது அவர்கள் கோபத்தை குறைத்து வாழ்கையில் ஒரு நல்ல தெளிவை கொடுக்கப் போகிறது. இவர்கள் வேலையில் உயர் பதவியை அடையக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் புதன் பகவான் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார். குடும்பத்தில் இவர்களுக்கு மதிப்பு உயரும். தவறாக புரிந்து கொண்டு இவர்களை பிரிந்த நபர்கள் தானாக முன்வந்து இவர்களிடம் பேசுவார்கள். குழந்தைகளுக்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







