2025 ரமா ஏகாதசி எப்பொழுது ? இந்த ஒரு விஷயம் செய்ய தவறாதீர்கள்
விஷ்ணு பகவானின் வழிபாடுகளில் ஏகாதசி வழிபாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் விரதங்களில் ஏகாதசி விரதமும் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக சொல்கிறார்கள். அதாவது இந்த ஏகாதசி நாளில் நாம் விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபாடு செய்தால் கேட்ட வரத்தை அவர் கொடுப்பார் என்பது நம்பிக்கை.
அப்படியாக ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை ஏகாதசி கொண்டாடப்படுகிறது. அப்படியாக 2025 ஆம் ஆண்டு ரமா ஏகாதசி அக்டோபர் 17ஆம் தேதி அன்று வர இருக்கிறது. இந்த நாளில் முறையாக விஷ்ணு பகவானை வழிபாடு செய்து விரதம் இருந்து வேண்டிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிற மாதங்களை காட்டிலும் இந்த மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் பகவான் விஷ்ணுவின் மனைவி லட்சுமி தேவி ரமா என்று அழைக்கப்படுகிறாள்.
எனவே இந்த ஏகாதசி பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. இந்த ஏகாதசி நாளில் நாம் விரதம் இருந்தும் தானம் வழங்கியும் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு வாழ்க்கையில் பல விதமான நன்மைகள் நடப்பதாக சொல்கிறார்கள்.
இந்த ரமா ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் உடுத்தி பகவான் விஷ்ணுவிற்கு நெய்வேத்தியம் படைத்து பூக்கள் சாற்றி விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை மனதார பாராயணம் செய்து வழிபாடு செய்தால் பகவானுடைய அருள் கிடைத்து அந்த நாள் சிறப்பான நாளாக அமையும்.
மேலும் இந்த ரமா ஏகாதசியில் மிக முக்கியமானது தானம் கொடுப்பது. நாம் முகம் தெரியாத நபருக்கு நம்மால் முடிந்த விஷயங்களை தானம் செய்வதால் அன்றைய நாள் மகாலட்சுமியும் விஷ்ணு பகவானும் மனம் குளிர்ந்து நமக்கு ஆசியை வழங்குவார்கள் என்று சொல்கிறார்கள். அதோடு இந்த நாளில் தானம் செய்யும் பொழுது நமக்கு கூடுதல் புண்ணியம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







