குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக இருக்கும் விபரீத ராஜ யோகம்

By Sakthi Raj Aug 30, 2025 11:51 AM GMT
Report

குரு பகவான் அவர் 13 மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய ராசியை மாற்ற இருக்கிறார். இதன் தாக்கம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏன் உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியாக குருபகவான் தற்பொழுது மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார்.

அக்டோபரில் அவர் உச்ச ராசியான கடக ராசிகள் நுழைகிறார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாக சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம். 

2025 செப்டம்பர் மாதம் இந்த முக்கிய விரத தினத்தை தவற விடாதீர்கள்

2025 செப்டம்பர் மாதம் இந்த முக்கிய விரத தினத்தை தவற விடாதீர்கள்

மிதுனம்:

குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையானபலன் தரப்போகிறது. மனதில் அவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிய தெளிவான முடிவையும் புரிதலையும் கொடுக்கப்போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன் அமையும். அதே சமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கான எல்லா சூழ்நிலைகளையும் அமையப்போகிறது. சிலருக்கு காதல் மலர வாய்ப்புகள் உள்ளது.

கன்னி:

கன்னி ராசியினருக்கு குருவின் பெயர்ச்சி மிக சாதகமாக அமையப்போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக தங்களுடைய வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கப்போகிறது. எதிர்காலம் பற்றிய பயம் முற்றிலுமாக விலகும். பங்கு சந்தையில் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்போகிறது. கணவன் மனைவி இடையே அதிக அன்பும் பிணைப்பும் உருவாகப் போகிறது. 

துலாம்:

துலாம் ராசியினருக்கு குருபகவானுடைய இந்த பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லப் போகிறார். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு போன்ற மகிழ்ச்சியான விஷயங்கள் எல்லாம் இவர்களை தேடி வரப்போகிறது. காதல் வாழ்க்கை பொறுத்தவரையில் இவர்களுக்கு மன மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் அமையப்போகிறது. முக்கியமாக இவர்களை சுற்றி உள்ளவர்கள் இவர்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US