2025 புரட்டாசி முதல் நாள் பெருமாளை வழிபாடு செய்ய உகந்த நேரம்
புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாடு செய்வதற்கான மிகச் சிறந்த மாதமாக இருக்கிறது. பெருமாள் கீதையில் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிடுகிறார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்திற்கு இணையான மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். இந்த புரட்டாசி மாதம் பெருமாளை அனுதினம் வழிபாடு செய்து அவருடைய அருளை பெறுவதற்கான ஒரு மிகச்சிறந்த மாதம் ஆகும்.
அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் எப்பொழுது பிறக்க இருக்கிறது? அன்றைய நாள் நாம் பெருமாளை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். புதன் பகவானுக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் பெருமாள் . அதனால் புரட்டாசி மாதம் புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மாதமாக இருக்கிறது.
இந்த மாதத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்தால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகி நமக்கு புண்ணியம் சேர்வதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று பிறக்கிறது.
மிகச் சிறப்பாக இந்த ஆண்டு புரட்டாசி மாதம் புதன்கிழமை அன்று பிறப்பது இன்னும் கூடுதல் விசேஷத்தை கொடுக்கிறது. அதோடு ஏகாதசியும் இணைந்து வருவதால் இன்னும் பல மடங்கு சிறப்பை பெறுகிறது.
அப்படியாக புரட்டாசி மாதம் முதல் நாள் புதன்கிழமை காலை பூஜை அறைகளில் வைத்திருக்கும் பெருமாள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து சந்தன குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
அதோடு வாழைப்பழம் வெற்றிலை பாக்கு கற்கண்டு பால் துளசி தீர்த்தம் ஆகியவற்றைப் பெருமாளுக்கு நெய்வேதியங்களாக படைக்க வேண்டும். முடிந்தவர்கள் சர்க்கரை பொங்கல் சுண்டல் வடை போன்றவையும் படைத்து வழிபாடு செய்யலாம்.
அதோடு பெருமாளுக்கு உரிய "ஓம் நமோ நாராயணாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை பெருமாளின் படத்திற்கு முன்பு பாராயணம் செய்து வேண்டுவது சிறப்பை கொடுக்கும். முடிந்தவர்கள் தெரிந்தவர்கள் பெருமாளின் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வழிபாடு செய்யலாம் அல்லது பெருமாளின் நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களையும் பாடி வழிபாடு செய்யலாம்.
மேலும் புரட்டாசி மாதம் முதல் நாள் பெருமாள் வழிபாடு செய்வதற்கான உகந்த நேரமாக காலை 6 முதல் 07.20 வரைகாலை 09.10 முதல் 10.20 வரைமாலை 6 மணிக்கு மேல் மேலும் வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
ஆக, துன்பங்களை துடைப்பவர் பெருமாள். அவருக்குரிய அற்புதமான புரட்டாசி மாதத்தில் அவரை வழிபாடு செய்து நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற கஷ்டங்கள் விலக அவருடைய முழு அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







