சனியை நேராக பார்க்கும் சூரியன்- இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் தங்களுடைய நகர்வை அவர்களுக்கு உரிய காலங்களில் செய்து கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் சூரியன் மற்றும் சனி பகவான் இருவரும் இணைந்து சமசப்தம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் சிலருக்கு நன்மையும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான பலன்கள் நடக்க போவதாக சொல்கிறார்கள்.
மேலும் சமசப்தம யோகம் என்பது இரண்டு கிரகங்களும் ஒன்றோடு ஒன்று எதிரே இருக்கும் பொழுது உருவாகக்கூடிய ஒரு நிலையாகும். அதவாது சூரியன் கன்னி ராசியிலும் சனி மீன ராசியிலும் இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் நேரடியாக பார்ப்பதால் இந்த யோகம் உருவாகிறது. அப்படியாக இந்த யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
சமசப்தம யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. ஆதலால் இவர்கள் இந்த காலகட்டத்தில் உடல்நிலை மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு இந்த கால கட்டத்தில் எதிரிகளால் சில தொந்தரவுகள் வரலாம். பணியிடங்களில் கூட இவர்களுக்கு மேல அதிகாரிகளால் சில கஷ்டங்கள் உருவாக இருப்பதால்கவனமாக இருக்க வேண்டுமாம்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு சமசப்தம யோகம் தொழில் வாழ்க்கையில் ஒரு சில ஏற்ற இறக்கங்களை கொடுக்கப்போகிறது. தேவையில்லாத மன உளைச்சல் வியாபாரத்திற்காக வீண் அழைச்சல் போன்ற நிலைகள் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் உருவாகலாம். மேலும் சட்டம் தொடர்பான விஷயங்களில் இவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு சமசப்தம யோகம் எதிர்பாராத சட்ட சிக்கல்களை கொடுக்கக்கூடும். ஒரு சிலருக்கு வாழ்க்கையில் பற்றற்ற நிலை உருவாகலாம். செய்யும் காரியங்களில் தடையும் தாமதமும் வரக்கூடும். ஒரு சிலருக்கு தேவை இல்லாத கடன் சுமைகள் அதிகரிக்கலாம். பொருளாதாரத்தில் இவர்கள் மிக கவனமாகவும் சிக்கனமாகவும் இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |