ஜாதகத்தில் இந்த கிரகம் நீசம் அடைந்தால் கட்டாயம் இதே நடந்தே தீருமாம்
ஜோதிடத்தில் ஒரு கிரகங்கள் ஆட்சியாக இருக்கிறதா அல்லது உச்சம் பெற்று இருக்கிறதா அல்லது நீசம் அடைந்திருக்கிறதா என்பதை வைத்து தான் நாம் பல கணிப்புகளை செய்கின்றோம். அப்படியாக ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் நமக்கு அந்த கிரகங்கள் வழியாக கெடு பலன்கள் நடப்பது இல்லை.
ஆனால் ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தால் எல்லோருக்கும் ஒரு வகையான அச்சம் உருவாகிறது. அப்படியாக ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தால் அவர்களுக்கு எந்த மாதிரியான பலன் கிடைக்கும். மேலும் நீசம் அடைந்திருக்கும் கிரகங்களால் பாதிப்புகள் மட்டும் தான் வருமா? என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவருடைய ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் நம்மை ஆளுமை செய்கின்றன. அவை ராசி அதிபதி, லக்னம் அதிபதி, மற்றும் உச்சம் நீசம் அடைந்த கிரகங்கள். இதில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகங்கள் மிகவும் வெளிப்படையாக ஆட்சி செய்யக்கூடிய கிரகமாக இருக்கும். ஆனால் நீசமடைந்த கிரகங்கள் மறைமுகமாக ஆளுமை செய்யக்கூடிய கிரக அமைப்புகள் கொண்டு இருக்கும்.
உதாரணமாக, சூரியன் உச்சம் பெற்றிருந்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைத்து அரசு அதிகாரியாக இருப்பார். ஆனால் சூரியன் நீசம் அடைந்திருந்தால் அவர்களுக்கு அரசு தொடர்பான மற்றும் சம்பந்தப்பட்ட வேலைகள் கிடைக்கும். அதே போல் புதன் பகவான் உச்சம் பெற்றிருக்கும் நபர்கள் வெளிப்படையாக தான் மிகவும் புத்திசாலி என்று காண்பித்துக் கொள்வார்.
ஆனால் புதம் நீசம் அடைந்த நபர் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால் எங்கு எதை சொல்லி சாதிக்க வேண்டும் என்று அவர் சரியான நேரத்தில் அதை செய்து சாதனை புரிந்து விடுவார்.
இவ்வாறாக ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் நீசம் அடைந்திருக்கிறதோ அந்த கிரகம் வாயிலாக அந்த ஜாதகர் மறைமுகமாக நற்பலன்களை பெற்று விடுகிறார். நீசமான கிரகங்களின் காரணிகள் கொண்டு ஜாதகர் தொழிலை அமைத்து கொள்ளும் பொழுது அவர் அந்த தொழிலில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைகிறார்.
மேலும், ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைந்தவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு கட்டாயமாக ஒரு நாள் ஒரு மிகப்பெரிய வெற்றியும் அவர்களுடைய திறமை வெளிப்படுவதற்கான நிலையும் உருவாகும். ஆக ஒரு கிரகம் நீசம் அடைந்திருக்கிறது என்றால் நாம் பயம் கொள்ள தேவையில்லை. அவை நமக்கு மறைமுகமாக பல நன்மைகளை தான் செய்யும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். | 
 
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
                 
                 
                                             
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        