அடுத்த 30 நாட்களில் இந்த 3 ராசிகளுக்கு சனி பணத்தை அள்ளி கொடுக்கப் போகிறார்
இந்த 2025ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் சனி பகவான் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் கொடுக்க இருக்கிறார். அதாவது சனி பகவானின் வக்கிர பயணம் ஆனது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும்.
அதிலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சனி பகவானின் யோகத்தால் இவர்கள் வாழ்கையில் மிக உயர்ந்த இடத்தை அடையப் போவதாக சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினருக்கு சனி பகவான் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் கட்டாயம் அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல செல்வாக்கை உயர்த்தி கொடுக்கப் போகிறார். இவர்களுக்கு நீண்ட நாட்களாக பொருளாதாரத்தில் சந்தித்து வந்த இழப்புகள் கடன் இவை அனைத்தும் விலகி நன்மை உண்டாகப் போகிறது. எதிர்பார்த்த காரியங்களும் எதிர்பார்த்த நற்செய்திகளும் இவர்களை வந்து சேரும்.
மீனம்:
மீன ராசியினருக்கு சனி பகவான் அவர்கள் வாழ்க்கையில் அமைதியையும் முன்னேற்றத்தையும் கொடுக்கப் போகிறார். இவர்கள் செய்யும் வேலைகளில் மற்றும் தொழில்களில் இவர்கள் மிகச் சிறந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெறப்போகிறார்கள். தொழில் ரீதியாக புதிதாக முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சனி பகவானின் அருளால் நற்பலன்கள் கிடைத்து நல்ல உயரம் பெறுவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சனிபகவான் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கொடுப்பார். இவர்கள் சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு அற்புதமான அமைப்பை கொடுக்கப் போகிறார். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சனி பகவான் அருளால் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும். உடல் நிலை மற்றும் ஆரோக்கியத்தில் இவர்கள் முன்னேற்றத்தை பெற போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். | 
 
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
                 
                 
                                             
         
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        