இன்றைய ராசி பலன் (01-11-2025)
மேஷம்:
இன்று வெளியே செல்லும் பொழுது சற்று கவனமாக இருங்கள். இன்று நியாபக மறதி சிலருக்கு உண்டாகலாம். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
இன்று வாழ்க்கையை பற்றிய முக்கியமான முடிவுகள் எடுப்பதில் சில குழப்பங்கள் உண்டாகலாம். கணவன் வழி சொந்தங்களால் சில பிரச்சனைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
இன்று உங்களை சுற்றி உள்ளவர்கள் மீது அதிகமாக கோபம் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கவன சிதறல் உண்டாகாமல் பார்த்து கொள்வது நல்லது.
கடகம்:
இன்று சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் முழு செலுத்துவார்கள். மதியம் மேல் நீங்கள் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
சிம்மம்:
கடன் தொல்லை விலகும் நாள். உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதல்கள் விலகும். விரும்பிய பொருட்கள் வாங்குவதில் சில சிரமம் சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
இன்று பழைய நினைவுகளால் சில சங்கடம் உண்டாகும். புதிய பொறுப்புகள் வேலையில் உங்களை தேடி வரும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்:
இன்று நீங்கள் இறைவழிபாட்டில் அதிகமான ஆர்வம் காட்டுவீர்கள். வீடுகளில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பாராத நபரிடம் சில அழைப்புகளை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்:
பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
தனுசு:
இன்று உங்கள் வீடுகளில் சில எதிர்பாராத உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.
மகரம்:
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். சிலர் பிடித்த பொழுது போக்கு ஈடுபாட்டில் பங்கு கொள்வார்கள். திருமண வரன் நினைத்தது போல் அமையும்.
கும்பம்:
அக்கம் பக்கத்தில் மிகவும் கவனமாக பழகுங்கள். உணவு விஷயங்களில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்பபடும்.
மீனம்:
மனதில் உள்ள பாரம் குறையும். உங்கள் பிள்ளைகள் வழியே நீங்கள் மகிழ்ச்சியான செய்தி கேட்பீர்கள். சமுதாயத்தில் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். மதிப்பு உயரும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |