2025 செப்டம்பர் மாதம் வரக்கூடிய 2வது கிரகணம் எப்பொழுது தெரியுமா?
இது 2025 ஆம் ஆண்டு பொருத்தவரையில் மொத்தம் நான்கு கிரகணங்கள் நிகழ உள்ளது. அதில் இரண்டு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணமும் நிகழ்கிறது. அந்த வகையில் ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் 7ஆம் தேதி அன்று நிகழ்ந்து அதில் முழு சந்திர கிரகணமாக ரத்த நிறத்தில் நிலவு காணப்பட்டது.
இதை பலரும் பார்த்து மகிழ்ந்தனர். அந்த வகையில் செப்டம்பர் மாதத்திலேயே அடுத்து ஒரு கிரகணம் நிகழ்கிறது. அதாவது 2025 ஆம் ஆண்டில் அடுத்த சூரிய கிரகணம் மற்றும் கடைசி கிரகணம் இது என்று சொல்கிறார்கள். இந்த வருடத்தில் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாள் அன்று செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.
இந்த நாள் சர்வ பித்ரு அம்மாவாசை நாள். அதோடு மறுநாள் நவராத்திரி பண்டிகையும் தொடங்க உள்ளது, இந்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21ஆம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:23 வரை உள்ளது.
இந்த கிரகணம் இரவில் நிகழவுள்ளதால் இந்தியாவில் இதை நாம் பார்க்க முடியாது. இந்த சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா, இந்தியா பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல் போன்ற சில நாடுகளில் இந்த சூரிய கிரகணம் ஆனது நாம் பார்க்க முடியும் என்று சொல்லுகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







