அதிர்ஷ்டம் பெற 2025 தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்ய வேண்டிய வழிபாடு
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும், சித்திரை மாதத்தில் தான் சூரிய பகவான் அவருடைய ஓராண்டு பயணத்தை முடிவு செய்து புதிய பயணத்தை தொடங்குவார்.
அதாவது சூரிய பகவான் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளிலும் தன்னுடைய பயணத்தை முடிப்பதையே ஓராண்டு என்கிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் நமக்கு வாழ்க்கையில் எல்லா அதிர்ஷ்டமும் செல்வமும் பெறுக செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
பிரம்ம தேவர் சித்திரை மாதத்தில் தான் பூமியில் உயிரினங்களை படைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும், தென்னிந்தியாவில் இந்த சித்திரை முதல் நாளானது தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரை பிறப்பு, சித்திரைக் கனி, சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் வழிபாடு செய்ய முதல் நாள் இரவே ஒரு தட்டில் முக்கனிகளான மா, பலா, வாழை போன்றவற்றை கொண்டு தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பழங்கள் தான் கட்டாயம் வைக்க வேண்டும் என்று இல்லை.
இதனுடன் வேறு பழங்களையும் வைக்கலாம். இவற்றுடன் 1 எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு சேர்த்து வைத்து கொள்ளவேண்டும். மேலும், வீட்டில் உள்ள தங்க நகைகளில் ஏதெனும் ஒரு நகை வைத்து கொள்ளவேண்டும்.
தங்கம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை. அதோடு கொஞ்சம் பணம் வைத்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் வைத்துவிட்டு அதற்கு முன்பாக கண்ணாடியை வையுங்கள். தமிழ் வருடப் பிறப்பு நாளில் காலையில் எழுந்ததுமே வீட்டில் உள்ள எல்லோருமே தட்டில் இருக்கும் பழங்கள், பணம், நகை போன்றவற்றில் தான் கண் குளிர விழிக்கவேண்டும்.
அதை பார்த்த பிறகு தட்டில் இருக்கும் கண்ணாடியில் மஹாலக்ஷ்மி தாயாரை மனதில் நினைத்து கொண்டு பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்து வழிபாடு செய்து தொடங்கினால் புது வருடம் நமக்கு செல்வத்தையும், மகாலட்சுமி தேவியின் முழு அருளையும் கொடுத்து அந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆண்டாக அமைய செய்யும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |