2025: தொண்டைமானாறு செல்வச்சந்நிதி தீர்த்தத் திருவிழா- நேரலை
முருகப்பெருமான் உலகெங்கிலும் பல இடங்களில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அப்படியாக இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் இருக்கிறது.
இங்க இருக்கும் முருகப்பெருமான் அன்னதானக் கந்தன் என்று பக்தர்களால் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில் இக்கோயிலில் கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றும தீர்த்தத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதை நிகழ்ச்சியை நேரலையில் கண்டு களித்து முருகப்பெருமானின் அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







