2025 திருக்கார்த்திகை எப்பொழுது தெரியுமா? நேரம் தேதி இதோ!
நம்முடைய இந்து மதத்தில் இறைவழிபாடுகளில் மிக முக்கிய பங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்ட நாள்தான் சிறந்த நாள் என்று இல்லை. நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யக்கூடய எல்லா நாட்களுமே மிகச்சிறந்த நாட்கள் தான்.
அப்படியாக நம்முடைய இந்து மதத்தில் 12 மாதங்களில் கார்த்திகை மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நாம் தினமும் வீடுகளில் எல்லா இடங்களிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். அதிலும் திருக்கார்த்திகை மிக முக்கியமான நாளாக இருக்கிறது.
இந்த கார்த்திகை தீபத் திருவிழாவை பல மக்கள் எதிர்பார்த்து காத்து இருந்து கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இன்னும் சிறிது நாட்களில் வர இருக்கின்ற நேரத்தில் திருக்கார்த்திகை எப்பொழுது? என்ற விவரங்களை பற்றி பார்ப்போம்.

திருவண்ணாமலையில் சிவபெருமான் அக்னி ரூபமாக காட்சியளித்த தினத்தை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினமாக கொண்டாடி வருகின்றோம். திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய மலை கிருதயுகத்தில் அக்னியாகவும், திரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாக இருக்கிறது.
மேலும் இந்த மலையை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த மலை அக்னியில் இருந்து வந்ததாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வாறு இவ்வளவு விசேஷங்களை கொண்டுள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை அன்று ஏற்றக்கூடிய தீபமானது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்து தரிசிக்க கூடிய ஒரு அற்புதமான நாளாகும்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா முதல் நாள் நவம்பர் 21 அன்று தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவில் கடைசி நாள் உற்சவம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நிறைவடைகிறது.

மேலும் இந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் பிரதான உற்சவ நாட்களாக கொடியேற்றம் நவம்பர் 24 திங்கட்கிழமை அன்று துவங்கி கார்த்திகை மகா தீபம் டிசம்பர் 3 புதன்கிழமை அன்று நடக்கிறது. இந்த நாள் அன்றுதான் பக்தர்கள் வீடுகளில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டமாக விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள்.
வீடுகளில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒரு அற்புதமான திருநாள் இந்த திருக்கார்த்திகை இருக்கிறது.
ஆக பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு சிறப்பாக இந்த திருக் கார்த்திகையை கொண்டாடி சிவபெருமான் மற்றும் அனைத்து தெய்வங்களுடைய அருளை பெறுவோமோ அதே போல் இந்த ஆண்டும் வரக்கூடிய கார்த்திகை நாளை மிகச் சிறப்பாக கொண்டாடி வீடுகளில் தவறாமல் விளக்கேற்றி இறைவனுடைய அருளைப் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |