2025 வைகாசி விசாகம்: விரதத்தை எப்பொழுது தொடங்கவேண்டும்?
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் அவரை வழிபாடு செய்ய நாம் மனதார அவரை உணர முடியும். மேலும், வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று கைவிடப்பட்ட விஷயங்கள் எல்லாம் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் அதை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.
அப்படியாக, முருகப்பெருமானின் வழிபாட்டிற்கு பல்வேறு முக்கிய நாட்கள் இருந்தாலும் வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. அதாவது, பௌர்ணமியும், விசாக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை தான் நாம் வைகாசி விசாகமாக கொண்டாடுகின்றோம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 9ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரம் ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி அன்று மாலை 4.4 மணி வரை இருக்கும்.
மேலும் பௌர்ணமி திதியானது ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 12.27 மணிக்கு தான் ஆரம்பமாகும். அதனால் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் ஜூன் 9ஆம் தேதி அன்று விரதம், வழிபாடு மற்றும் பூஜைகள் செய்யலாம்.
இந்த வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிக சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் உணவு எடுத்துக்கொள்ளாமல் பால், பழம் சாப்பிட்டு கூட விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.
அதோடு மிக முக்கியமாக அன்றைய தினம் வீடுகளில் கந்த சஷ்டி கவசம், முருகனுக்குரிய மந்திரங்கள், ஆகியவற்றை பாராயணம் செய்து வழிபாடு செய்யவேண்டும். மேலும், வீடுகளில் வேல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வைகாசி விசாகம் நாளில் அதற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபாடு செய்யவேண்டும்.
சிலர் அவர்கள் வாழ்க்கையில் தொடர் தடைகளை சந்தித்து கொண்டு இருப்பார்கள். திருமணத்தில் தாமதம், குழந்தை பிறப்பதில் தாமதம், சரியான தொழில் அமைவதில் தாமதம் என்று அடுத்து அடுத்து அவர்கள் வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கும்.
அவர்கள் கட்டாயம் வைகாசி விசாகம் நாளில் மனதார முருகப்பெருமானை மனதில் நினைத்து வழிபாடு செய்து விரதம் இருந்தால் நாம் நினைத்த காரியத்தை முருகன் நிச்சயம் நடத்திக்காட்டுவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |