விநாயகர் சிலையை எப்போது கரைக்க வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று நம் வீடுகளில்புதிதாக களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை வாங்கி வைத்து வழிபாடு செய்வோம். அவ்வாறு வாங்கி வைத்து வழிபாடு செய்யும் விநாயகரை நீர் நிலைகளில் கரைப்பார்கள். அப்படியாக விநாயகர் சிலையை வழிபாடு செய்த பிறகு எப்பொழுது கரைக்க வேண்டும் என்று பார்ப்போம்.
நம்முடைய தடைகளையும் துன்பங்களையும் கரைக்க கூடியவர் விநாயகர் பெருமான். அவரைப் போற்றி வழிபாடு செய்யும் பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி. உலகம் எங்கிலும் மிகச் சிறப்பாக இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
வீடுகளில் தொடங்கி அலுவலகம் தொழில் செய்யும் இடம் என்று அனைத்து இடங்களிலும் விநாயகப் பெருமானின் சிலையை வாங்கி வைத்து பூஜை செய்து வழிபாடு மேற்கொள்வார்கள். அவ்வாறு வாங்கி வைத்து வழிபாடு செய்யும் விநாயகர் சிலையை எந்த நாட்களில் கரைக்க வேண்டும் என்று ஒரு சந்தேகம் இருக்கும்.
அந்த வகையில் 3 அல்லது 5 நாட்கள் நாம் விநாயகர் சிலையை வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதாவது நீங்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விநாயகர் சிலையை வாங்கியிருந்தால் மூன்றாம் நாளில் அந்த சிலையை எடுத்துச் சென்று கரைக்கலாம்.
மேலும் நீர்நிலைகளில் கரைக்கும் பொழுது நீர் நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தயார் செய்த விநாயகர் சிலை இல்லாமல் இருப்பது நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







