2026 மாசி மகம் தீர்த்தவாரி..100- க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில்..

By Sakthi Raj Mar 04, 2026 11:25 AM GMT
Report

மாசி மாதத்தில் மாசி மகம் மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. அப்படியாக புதுச்சேரி வைத்திகுப்பம் கடற்கரையில் 124 ஆம் ஆண்டு மாசி மகம் தீர்த்த வாரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறக்கூடிய இந்த திருவிழா இந்த ஆண்டும் ஆன்மீக உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அருள் பாலித்தார்கள்.

2026 மாசி மகம் தீர்த்தவாரி..100- க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில்.. | 2026 124Th Masi Magam Theerthavari Celebration

சனி பகவானின் முழு அருள் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

சனி பகவானின் முழு அருள் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

அப்படியாக மாசி மகம் தீர்த்தவாரிக்கு தமிழகத்தின் மைலம் முருகன் கோவில், தீவனூர் விநாயகர் கோவில், செஞ்சி ரங்கநாதர் கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உற்சவர்கள் வருகை தந்தனர்.

அதேபோல், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களின் உற்சவமூர்த்திகளும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார்கள்.

2026 மாசி மகம் தீர்த்தவாரி..100- க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில்.. | 2026 124Th Masi Magam Theerthavari Celebration

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

மேலும் காலை முதலே இலட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பங்களுடன் கடற்கரைக்கு வந்துவிட்டனர். அதாவது எல்லா சுவாமிகளும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாசி மகம் தீர்த்தவாரி புனித நீராடலை முன்னிட்டு பலத்த போது போலீஸ் பாதுகாப்பும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பும் நடைபெற்றது.

அதோடு, கடலில் நீராடிய பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீனவர்கள் உதவியுடன் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளும் ஈடுபட்டனர். இந்த 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிற மாசி மகம் தீர்த்தவாரி விழாவானது சுமார் 124 ஆம் ஆண்டு கொண்டாடும் மாசி மகம் தீர்த்தவாரி விழா என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US