2026: இந்த ஆண்டு இந்த ராசிகள் வாழ்க்கையில் ஜெயிப்பது உறுதியாம்

By Sakthi Raj Apr 08, 2026 01:30 PM GMT
Report

ஒவ்வொரு ஆண்டும் கிரகங்கள் தங்களுடைய மாற்றங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சந்திர பகவான் மிகவும் குறுகிய காலகட்டங்களில் அவருடைய இடத்தை மாற்றுகிறார். அதே போல் சனி பகவான் நீண்ட காலங்கள் எடுத்து அவருடைய இடத்தை மாற்றுகிறார்.

இவ்வாறாக கிரகங்கள் அவர்களுடைய தன்மைக்கு ஏற்ப அவர்களுடைய கட்டத்தை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இதனுடைய தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். அதே போல் ஒவ்வொரு வருட பிறப்பின் பொழுதும் கிரகங்களுடைய நகர்வுகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.

அந்த வகையில் 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தேடிக் கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.

2026: இந்த ஆண்டு இந்த ராசிகள் வாழ்க்கையில் ஜெயிப்பது உறுதியாம் | 2026 3 Zodiac Who Is Going To Get Success In Life

முருகா என்று கூப்பிட்டதால் பக்தருக்கு நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

முருகா என்று கூப்பிட்டதால் பக்தருக்கு நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஒரு புதிய தொடக்கமாகவே அமையப்போகிறது. நண்பர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களை பற்றிய உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். நீண்ட நாட்கள் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு கட்டாயம் இந்த ஆண்டு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய காதல் ஒரு சிலருக்கு மலருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் இந்த 2026 ஆம் ஆண்டு புதிய மனிதராகவே உருவெடுக்க போகிறார்கள். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது திருமணம் நினைத்தது போல் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வையும் பெறப்போகிறீர்கள். எதையும் நிதானமாக யோசித்து போராடி ஜெயிக்க கூடிய வருடம்.

2026: தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டில் கட்டாயம் இது நடக்குமாம்? பஞ்சாங்கம் சொல்வதென்ன?

2026: தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டில் கட்டாயம் இது நடக்குமாம்? பஞ்சாங்கம் சொல்வதென்ன?

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு பிறவி பலனை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நீண்ட நாட்களாக மனதை வருடிக் கொண்டிருந்த கவலைகளிலிருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள். பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்வுகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தாய் வழி உறவுகள் இடம் இருந்த கசப்புகள் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US