நாளைய ராசிபலன் (09-04-2026)

Report

மேஷம்:

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பேச்சுகளில் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். எதிர்பாராத இடங்களில் இருந்து சில உதவிகள் கிடைக்கலாம்.

ரிஷபம்:

இன்று எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய நாள். வேலையில் வீண் அலைச்சல் உண்டாகலாம். தேவையில்லாத செலவுகளால் ஒரு சிலர் வீண் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்:

இன்று சகோதரர் வழியே உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். பயணங்கள் வழியாக புதிய அனுபவங்களை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

கடகம்:

இன்று சக ஊழியர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் உயர்கல்வியை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

சிம்மம்:

இன்று கடன் சார்ந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பிற மொழி பேசும் நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள்.

தமிழ்நாட்டில் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் 3 முக்கிய கோவில்கள்

தமிழ்நாட்டில் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் 3 முக்கிய கோவில்கள்

கன்னி:

இன்று நண்பர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கக் கூடிய நாள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம்.

துலாம்:

இன்று எதிர்பாராத சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் எண்ணம் புரியவரும். மனச்சோர்வு உண்டாகலாம். மறைமுகமான போட்டிகளை எதிர்த்து சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்:

ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையில்லாத எதிர் வாதங்கள் செய்யாதீர்கள். தாய்மாமன் வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உணவுகளில் கவனம் வேண்டும்.

தனுசு:

சுபகாரிய நிகழ்ச்சிகளை நினைத்தது போல் நிறைவேற்றுவீர்கள். குடும்ப விஷயங்களில் தேவையில்லாத வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். முதலீடுகளில் கவனம் வேண்டும்.

முருகா என்று கூப்பிட்டதால் பக்தருக்கு நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

முருகா என்று கூப்பிட்டதால் பக்தருக்கு நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

மகரம்:

உணவு தொடர்பான துறைகளில் உங்களுடைய அறிமுகம் கிடைக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சிந்தனைகளில் மிகுந்த கவனம் வேண்டும்.

கும்பம்:

வியாபாரத்தில் முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் புதிய அனுகூலம் கிடைக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

மீனம்:

இன்று பிள்ளைகளைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரக்கூடிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US