2026: ஆனி மாதம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள்

By Sakthi Raj Jun 16, 2026 02:00 PM GMT
Report

 தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக வரக்கூடிய ஆனி மாதம் சூரிய பகவான் புதன் வீடான மிதுன ராசியில் பயணிக்க துவங்குவார். உத்திராயண புண்ணிய காலத்தின் நிறைவு மாதமான ஆனி மாதம் சிவ வழிபாட்டிற்கும் பெருமாள் வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆனி மாதத்தில் வருகின்ற உத்திர நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு நடத்தப்படும் மகா அபிஷேகத்திற்கு ஆனி திருமஞ்சனம் என்ற பெயர் உண்டு. இந்த அபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை.

அதேபோல், பெருமாளை இந்த மாதம் மனம் உருகி வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி நாளில் விரதம் இருந்த முழு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக ஆனி மாதத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விரதம் மற்றும் விசேஷ நாட்களை பற்றி பார்ப்போம்.  

2026: ஆனி மாதம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள் | 2026 Aani Month Fasting And Festival Dates

ஜாதகத்தில் குரு பார்வை யாருக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் ?

ஜாதகத்தில் குரு பார்வை யாருக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் ?

ஆனி 2026 விசேஷங்கள் :

ஜூன் 20 ஆனி 06 சனி மாணிக்கவாசகர் குருபூஜை

ஜூன் 22 ஆனி 08 திங்கள் ஆனி திருமஞ்சனம்

ஜூன் 26 ஆனி 12 வெள்ளி மொஹரம் பண்டிகை

ஆனி 2026 விரத நாட்கள் :

அமாவாசை ஜூலை 14 செவ்வாய் ஆனி 30

பெளர்ணமி ஜூன் 29 திங்கள் ஆனி 15

கிருத்திகை ஜூலை 10 வெள்ளி ஆனி 26

திருவோணம் ஜூலை 02 வியாழன் ஆனி 18

ஏகாதசி

ஜூன் 25,வியாழன்,ஆனி 11,

ஜூலை 10 வெள்ளி ஆனி 26

சஷ்டி

ஜூன் 20, சனி, ஆனி 06, 

ஜூலை 06 திங்கள் ஆனி 22

சங்கடஹர சதுர்த்தி ஜூலை 03 வெள்ளி ஆனி 19

சிவராத்திரி ஜூலை 12 ஞாயிறு ஆனி 28

சதுர்த்தி ஜூன் 18 வியாழன் ஆனி 04

நீங்கள் கும்ப ராசியில் பிறந்த ஆண்களா? உங்கள் வாழ்க்கை கரும பலன் இதுதான்

நீங்கள் கும்ப ராசியில் பிறந்த ஆண்களா? உங்கள் வாழ்க்கை கரும பலன் இதுதான்

ஆனி 2026 சுப முகூர்த்த நாட்கள் :

ஜூன் 17 ஆனி 03 புதன் வளர்பிறை முகூர்த்தம்

ஜூன் 18 ஆனி 04 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்

ஜூன் 24 ஆனி 10 புதன் வளர்பிறை முகூர்த்தம்

ஜூன் 25 ஆனி 11 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்

ஜூலை 02 ஆனி 18 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்

ஜூலை 05 ஆனி 21 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

ஜூலை 12 ஆனி 28 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US