நட்சத்திரத்தை மாற்றும் கேது.. இந்த ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

By Sakthi Raj Mar 06, 2026 10:00 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் கேது பகவான் ஞானத்தை வழங்கக் கூடியவர். மேலும், நவகிரகங்களில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியவர்கள் கேது மற்றும் ராகு. இவர்கள் பின்னோக்கி பயணம் செய்யக் கூடியவர்கள். இந்த ராகு மற்றும் கேதுவின் நிலை மாற்றம் கட்டாயமாக ஒரு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.

அந்த வகையில் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று மாலை 4. 49 மணிக்கு கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இது மிகவும் முக்கியமானதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்க போவதாக சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

சனிபகவான் தாக்கம் குறைய இந்த முறையில் பரிகாரம் செய்யுங்கள்

சனிபகவான் தாக்கம் குறைய இந்த முறையில் பரிகாரம் செய்யுங்கள்

நட்சத்திரத்தை மாற்றும் கேது.. இந்த ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம் | 2026 April 20 Kethu Natchathira Peyarchi Palangal

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு கேது பகவானுடைய இந்த இடம் மாற்றமானது இவர்களுக்கு பல வடிவங்களில் நன்மையை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். கடந்த காலங்களில் உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் இன்றைய காலகட்டங்களில் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கக்கூடிய காலகட்டம். பலரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள்.

கடகம்:

கடக ராசிக்கு இந்த கேது இடமாற்றமானது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்க போகிறது. தொழில் ரீதியாக பல்வேறு வழிகளில் இவர்களுக்கு பண வரவும் லாபமும் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்குவதை பற்றி யோசனையும் உண்டாகும். அதற்கான வருமானமும் நீங்கள் பெறுவீர்கள். கேதுவின் ஆசிர்வாதத்தால் மாணவர்கள் படிப்பு சிறந்து விளங்குவார்கள்.

2026-ல் தொடங்கிய சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாற்றில் இன்று என்ன நடந்தது?

2026-ல் தொடங்கிய சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாற்றில் இன்று என்ன நடந்தது?

சிம்மம்:

கேதுவின் இடமாற்றம் சிம்ம ராசிக்கு இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்க போகிறது. நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த காரியங்கள் இவர்களுக்கு நல்ல முடிவை பெறும். வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் அங்கீகாரமும் பெறுவீர்கள். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலை நல்ல முடிவைப் பெறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US