ரோகிணி நட்சத்திரத்தில் சுக்கிர பகவான்.. ஐஸ்வர்யங்களை அனுபவிக்கப் போகும் ராசிகள்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட சில நேரங்களில் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிர பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். ரோகிணி நட்சத்திரத்தை சந்திர பகவான் ஆட்சி செய்கிறார்.
மேலும், சந்திரன் வீட்டில் சுக்கிர பகவான் இடம் மாறுவது சில ராசிகளுக்கு மகிழ்ச்சியையும் செல்வ செழிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. இங்கு மே எட்டாம் தேதி வரை நிலைத்திருக்கிறார். அதன் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குப் இடமாறுகிறார். இதனால் நன்மை பெற போக்கக்கூடிய ராசிகள் பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ரோகிணி நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு பல வகைகளில் நன்மை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. குறிப்பாக இவர்களுக்கு பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் மன குழப்பத்தில் இருந்து வருபவர்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய காலகட்டமாகும். உங்களின் கடமைகளில் நீங்கள் முழு கவனத்தை செலுத்துவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு ரோகிணி நட்சத்திரத்தில் இந்த பெயர்ச்சி இவர்களுக்கு மூதாதையர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடப்போகிறது. மனதில் நினைத்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். இந்த காலகட்டங்களில் பல வகையில் தடைபட்டிருந்த வருமானம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பை பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியானது அவர்களுக்கு மிகவும் சுப பலன்களை கொண்டு வந்து சேர்க்கபோகிறது. உங்களின் ஆளுமை திறன் வெளிப்படும். உங்களின் சுகபோகங்களும் வசதிகளும் மேம்படும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி அடைவீர்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |