2026: ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள்
ஆங்கில மாதத்தில் நான்காவது மாதமாகவும் தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மற்றும் முதல் மாதமான சித்திரை இணைந்து வரக்கூடிய மிகச்சிறந்த மாதமாக இந்த ஏப்ரல் மாதம் இருக்கிறது.
ஜோதிடத்தில் தலைமை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஏப்ரல் மாதத்தில் தான் முதல் ராசியான மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார்.
அதோடு, ஏப்ரல் மாதத்தில் பங்குனி உத்திரம், மதுரை சித்திரை திருவிழா, தமிழ் புத்தாண்டு அட்சய திருதியை என பல்வேறு சிறப்பு கொண்டாட்டங்கள் இந்த மாதத்தில் நிறைந்து இருக்கிறது.
அப்படியாக இந்த ஏப்ரல் மாதத்தில் இருக்கக்கூடிய முக்கியமான விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
ஏப்ரல் 2026 முக்கிய விசேஷங்கள் :
ஏப்ரல் 01 புதன் பங்குனி 18 பங்குனி உத்திரம்
ஏப்ரல் 14 செவ்வாய் சித்திரை 01 தமிழ் வருடப்பிறப்பு
ஏப்ரல் 20 திங்கள் சித்திரை 07 அட்சய திருதியை
ஏப்ரல் 21 செவ்வாய் சித்திரை 08 சங்கர ஜெயந்தி
ஏப்ரல் 26 ஞாயிறு சித்திரை 13 வாசவி ஜெயந்தி
ஏப்ரல் 28 செவ்வாய் சித்திரை 15 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
ஏப்ரல் 30 வியாழன் சித்திரை 17 நரசிம்மர் ஜெயந்தி,மதுரை ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை
ஏப்ரல் 2026 முக்கிய விரத நாட்கள் :
அமாவாசை ஏப்ரல் 17 வெள்ளி சித்திரை 04
பெளர்ணமி ஏப்ரல் 01 புதன் பங்குனி 18
கிருத்திகை ஏப்ரல் 19 ஞாயிறு சித்திரை 06
திருவோணம் ஏப்ரல் 11 சனி பங்குனி 28
ஏகாதசி
ஏப்ரல் 13 திங்கள் பங்குனி 30
ஏப்ரல் 27 திங்கள் சித்திரை 14
சஷ்டி
சஷ்டி புதன், பங்குனி 25,
ஏப்ரல் 22 புதன் சித்திரை 09
சங்கடஹர சதுர்த்தி ஏப்ரல் 05 ஞாயிறு பங்குனி 22
சிவராத்திரி ஏப்ரல் 15 புதன் சித்திரை 02
பிரதோஷம்
ஏப்ரல் 15,புதன் சித்திரை 02
ஏப்ரல் 29 ,புதன் ,சித்திரை 16 சதுர்த்தி
ஏப்ரல் 20 திங்கள் சித்திரை 07
ஏப்ரல் 2026 சுபமுகூர்த்த நாட்கள் :
ஏப்ரல் 06 பங்குனி 23 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 12 பங்குனி 29 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 13 பங்குனி 30 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 16 சித்திரை 03 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 20 சித்திரை 07 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 23 சித்திரை 10 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 30 சித்திரை 17 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம் :
ஏப்ரல் 23 சித்திரை 10 வியாழன் காலை 08.54 முதல் 09.30 வரை
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |