2026: ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்

By Sakthi Raj Apr 02, 2026 01:00 PM GMT
Report

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் நிறைய அலைச்சலை சந்திப்பீர்கள். போதுமான ஓய்வு பெற முடியாத நிலை வரலாம். முடிந்த அளவு செலவுகளை குறைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவிடப் போகிறீர்கள். உடன் பிறந்தவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். ஒரு சிலருக்கு திருமண வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் புதிய வாய்ப்புகள் தொழிலில் தேடி வர போகிறது. சமுதாயத்தில் முக்கியமான மற்றும் பெரிய நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

திருமணமான பெண்கள் தவறியும் இந்த நகைகளை அணியக் கூடாதாம்

திருமணமான பெண்கள் தவறியும் இந்த நகைகளை அணியக் கூடாதாம்

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி கிடைக்கப் போகிறது. ஒரு சிலருக்கு தலைமை பதவி தேடி வரும். தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலர் உயர் கல்வி படிப்பிற்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் நல்ல ஆதரவும் அனுகூலமும் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கப் போகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் ரீதியாக நிறைய வருமானங்களை பெறப் போகிறீர்கள். துணி வியாபாரம் செய்பவர்களுக்கு பொன்னான காலமாக அமையப்போகிறது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் மகிழ்ச்சியான நிலை பெறப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை விலகும். திடீர் நேர்மறையான திருப்பங்களால் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

தங்கம் விலை உயருமா? ஜோதிடர் ஷெல்வி சொல்லும் முக்கிய தகவல்கள்..

தங்கம் விலை உயருமா? ஜோதிடர் ஷெல்வி சொல்லும் முக்கிய தகவல்கள்..

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் நல்ல வளர்ச்சியை பெறப் போகிறீர்கள். உங்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்கப் போகிறது. உங்களுடைய தனி திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் புதிய தொழிலில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக போகிறது. உடன் பிறந்தவர்களிடம் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் அவர்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும் மதிப்பும் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் விலகும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் தொழில் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வலிமையை பெறப்போகிறீர்கள். எதையும் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெறக்கூடிய மாதமாக அமையப்போகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் வேலை செய்யும் இடங்களில் உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது. நடிப்பு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US