மீன ராசியில் பெயர்ச்சி ஆகும் புதன்.. எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கும் ராசிகள் யார்?

By Sakthi Raj Mar 29, 2026 07:14 AM GMT
Report

ஜோதிடத்தில் புதன் பகவான் தான் கல்வி, பேச்சு, தகவல் தொடர்பு ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறார். அப்படியாக, புதன் பகவானின் மாற்றம் 12 ராசிகளுக்கும் மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் புதன் பெயர்ச்சி நடக்க உள்ளது.

அதாவது 2026 ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்தார். பிறகு அவர் ஏப்ரல் 11, 2026 அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் யாருக்கு எதிர்ப்பாராத பணவரவு, வேலை மாற்றம் சம்பள உயர்வு காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

மீன ராசியில் பெயர்ச்சி ஆகும் புதன்.. எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கும் ராசிகள் யார்? | 2026 April Puthan Peyarchi Astrology Prediction

உங்கள் ராசிப்படி கஷ்டமான நேரத்தில் உங்களுடன் இருப்பவர் யார் தெரியுமா ?

உங்கள் ராசிப்படி கஷ்டமான நேரத்தில் உங்களுடன் இருப்பவர் யார் தெரியுமா ?

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு இந்த புதன் பெயர்ச்சி இவர்களுக்கு பேச்சு திறனை வளர்க்க போகிறது. இவர்கள் இந்த காலகட்டத்தில் பேச்சு சாதுரியத்தால் மிக பெரிய அளவில் வேலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். மாணவர்கள் போட்டி தேர்வை சிறப்பாக எழுதுவார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று விரும்பக் கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டமும் ஆன்மீக சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் அமையும்.

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு எதிர்ப்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாக போகிறது. நீண்ட நாட்கள் மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் உங்களுடைய வியாபாரம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு பல மடங்கு நன்மையை செய்யப்போகிறது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US