2026: அதிர்ஷ்டம் உங்கள் காலடியில்.. கும்ப ராசியினர் நவம்பர் மாத பலன்கள்...
சனி பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற கும்ப ராசியினருக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு 9ஆம் இடத்தில் புதனுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பதால் டிஜிட்டல் துறை நெட்வொர்க்கிங், மருத்துவத்துறை ஆகிய இடங்களில் ஒரு நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி கொடுக்கும்.
அதே போல், ரியல் எஸ்டேட், இடைத்தரகர் தொழில் வழியாகவும் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு சூரியன் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகுவதால் அரசு தொடர்பான வேலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்கள் போன்ற தொழில் முறை பணியாளர்களுக்கு விருதுகள் மற்றும் கௌரவம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்உள்ளது.
நவம்பர் 17ஆம் தேதி குரு ஏழாம் இடத்திற்கு வருவதால் கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் விலகி நல்ல மகிழ்ச்சியான உறவு மேம்படும்.
கும்ப ராசியினர் மன அமைதிக்கும் நேர்மறையான ஆற்றலுக்கும் இந்த காலகட்டங்களில் இவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் அல்லது சிங்கப்பெருமாள் கோவில் சென்று வழிபாடு செய்கின்ற பொழுது ஒரு நல்ல மாறுதல் கிடைக்கும் என்று அறிவுறுத்திகிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள்.
மேலும், நவம்பர் மாதம் 5, 6 மற்றும் ஏழாம் தேதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் எவ்வளவு அதிகரித்தாலும் சேமிப்பில் கவனம் செலுத்துவதாக அவசியம். சொத்து தொடர்பான விஷயங்களில் கூடுதல் பாதுகாப்பை இருப்பது முக்கியமாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |