ஜோதிடம்: அடுத்த ஆறு மாதத்திற்கு மழையால் ஆபத்து காத்திருக்கிறதாம்
ஜோதிட ரீதியாக நாம் ஒரு தனிநபருடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல் உலகளாவிய கணிப்புகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
தற்பொழுது வானிலை மாற்றங்கள், காலநிலை மற்றும் அரிசி விலை உயர்வு போன்ற பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு குறித்து ஜோதிட ரீதியாக கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராஜநாடி கா.பார்த்திபன் அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம். தற்பொழுது வர இருக்கும் மூன்று மாதங்களில் அதீத கன மழை மற்றும் எல் நினோ பாதிப்புகள் குறித்து மக்கள் கொண்டுள்ள அச்சம் பற்றி அவர் விளக்குவதாவது, குரு மற்றும் ராகு போன்ற கிரகங்களின் உடைய சேர்க்கையால் சில தடைகளை ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று அவர் கூறுகிறார்.
மேலும், அரிசி விலை உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்த கேள்விகளுக்கு இவை இயற்கையான மாற்றங்களை விட அரசியல் காரணங்களால் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகள் என கருதப்படும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் சனி மற்றும் ராகு உடைய இணைவானது சிறிய அளவிலே இருக்கக்கூடிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் பெரிய அளவில் அவை பாதிப்பை உண்டு செய்யாது என்றும் அவர் சொல்கிறார்.
மேலும், மழை தொடர்பான ஜோதிட விஷயங்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |