2026: நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிகள் யார் ?
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் தான் தன்னம்பிக்கை, மரியாதை தலைமைத்துவ பொறுப்புகள் ஆகிவற்றுக்கு காரணியாக இருக்கிறார். சனி பகவான் ஒழுக்கம், நீதி நேர்மை, கட்டுப்பாடு ஆகிவற்றை குறிக்கக் கூடியவராக இருக்கிறார்.
அந்த வகையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு கடக ராசியில் உள்ள சூரிய பகவானும் மீன ராசியில் இருக்கின்ற சனிபகவானும் மங்களகரமான நவபஞ்ச யோகத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 5 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இதனால் யாருக்கு அதிக அளவில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்:
நவபஞ்சமா யோகத்தால் இவர்களுக்கு சிந்தனையில் ஒரு புதிதான மாற்றம் பிறக்கும். நிறைய விஷயங்களை தேடி கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் உண்டாகும். தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் உயர்ந்த இடத்தை பெற போகிறீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்:
இவர்களுக்கு இரண்டாம் வீடான செல்வம் மற்றும் பேச்சு உரிமைக்குரிய இடம் என்பதால் இவர்களுக்கு தங்களுடைய பேச்சுக்களால் ஒரு மிகப்பெரிய அளவில் வியாபாரத்தில் வெற்றி அடைவார்கள். எழுத்து மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி:
இவர்களுக்கு இந்த யோகத்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையப்போகிறது. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கான வருமானமும் இருக்கும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள். தலை நிமிர்ந்து வாழக்கூடிய அமைப்பு உண்டாக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |