தொழிலில் குழப்பமா? 2026 ஆம் ஆண்டு 12 ராசிகள் செய்ய வேண்டியவை?

By Sakthi Raj Dec 04, 2025 04:34 AM GMT
Report

ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சியம் அவருடைய 12 ராசிகளுக்குரிய குணங்களை அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுடைய சிந்தனைகளில் நாம் காணலாம். அதாவது ஒவ்வொருவரும் அவர்களை அறியாத நிலையில் அவர்களுடைய ராசி அமைப்புகளால் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தொழில் அமைப்புகள் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் தொழில் ரீதியாக நிறைய குழப்பங்கள் கொண்டிருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேடுதலில் இருப்பவர்களுக்கு 2026 ஆண்டு அவர்கள் ராசிக்குரிய தொழில் என்ன செய்யலாம் என்பதையும் தொழில் ரீதியாக அவர்கள் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

தொழிலில் குழப்பமா? 2026 ஆம் ஆண்டு 12 ராசிகள் செய்ய வேண்டியவை? | 2026 Best Career Moves For 12 Zodiac Sign

குரு புதன் இணைவால் உருவாகும் நவபஞ்ச யோகம் - யாருக்கு பொற்காலம்?

குரு புதன் இணைவால் உருவாகும் நவபஞ்ச யோகம் - யாருக்கு பொற்காலம்?

மேஷம்:

மேஷ ராசிக்கு தொழில் ரீதியாக இவர்கள் நிறைய குழப்பங்கள் கொண்டிருந்தார்கள் என்றால் 2026 இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால்களை கொடுத்து மிக பெரிய உயரத்திற்கு கூட்டிச் செல்ல போகிறது. ஆக இவர்கள் அவர்களுடைய தொழில் ரீதியான யோசனைகளை ஒரு சரியான கட்டமைப்பு கொண்டு உருவாக்கி அதில் வெற்றி பெற தயாராக இருக்கலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசியினர் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை இன்னும் கடினமாகவும் இன்னும் கூடுதல் முயற்சி கொண்டு முன்னேற்றத்திற்காகவும் செய்தால் நிச்சயம் இந்த ஆண்டு நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கு நிறைய வகுப்புகள் புத்தகம் தேடி படிக்கலாம். உங்களுடைய சிறிது நேரத்தையும் உங்களுடைய தொழிலுக்கு பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு கட்டாயம் இந்த ஆண்டு ஒரு நல்ல மாற்றம் தேவைப்படுகிறது. ஆதலால் நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு நிறைய விஷயங்களை தேடி செல்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கான ஒரு தொழில் வாழ்க்கையை நீங்கள் இந்த ஆண்டு கட்டாயம் அமைத்துக் கொண்டு அதில் வெற்றி பெறலாம்.

கடகம்:

கடக ராசியினர் மக்களை ஒருங்கிணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதில் மிகச்சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆக இந்த 2026 ஆம் ஆண்டு உங்களுக்கு தலைமை பண்பு மிக சிறந்த நிலையில் இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மக்கள் உங்களுடன் பழகவும் உங்களுடைய ஆலோசனை கேட்கவும் காத்திருப்பார்கள்.

சிம்மம்:

இந்த ஆண்டு நீங்கள் எவ்வளவு தூரம் உங்களை தொழில் ரீதியாக எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் வெளிக்காட்டி கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். இந்த ஆண்டு உங்களுக்கான ஆண்டு உங்களை நிரூபித்துக் கொள்வதற்கான அற்புதமான ஆண்டு.

ஒரே நாளில் 3 விசேஷங்கள்- நாளைய தினம் இந்த வழிபாடு செய்ய மறக்காதீர்கள்

ஒரே நாளில் 3 விசேஷங்கள்- நாளைய தினம் இந்த வழிபாடு செய்ய மறக்காதீர்கள்

கன்னி:

இந்த ஆண்டு பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு உங்களுடைய முன்னேற்றம் இருக்கப் போகிறது. உங்களுடைய சொந்த வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையும் மிகச் சரியாக கொண்டு சென்று மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கப் போகிறீர்கள். ஆக தொழில் ரீதியாக நீங்கள் நிறைய விஷயங்கள் கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் அதற்கான வெற்றி உண்டாகும்.

துலாம்:

துலாம் ராசியினருக்கு அவர்களுடைய துணையுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு உருவாக போகிறது. உங்களுடைய அறிவாற்றலால் கொண்டு எல்லா வேலையையும் மிக சுலபமாகவும் உடனடியாக செய்து முடித்து வெற்றியை காணக்கூடிய ஒரு அற்புதமான ஆண்டு. எல்லோரிடமும் உங்களுடைய அனுபவ வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு அவர்களிடம் அவர்களுடைய அனுபவத்தை பெற்று தொழில் செய்தால் வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு இந்த வருடம் ஒரு மிகப்பெரிய சாதனை வருடம். உங்களுடைய உள்ளுணர்வை நீங்கள் நம்பி நிறைய காரியங்களை செய்யலாம். தொழில் ரீதியாக நிறைய இடங்களில் இருந்து உங்களுக்கு நினைத்து பார்க்காத அளவிற்கு வாய்ப்புகள் தேடி வர போகிறது.

தனுசு:

தனுசு ராசியினருக்கு தொழில் ரீதியாக மற்றும் வாழ்க்கை ரீதியாக ஒரு தேடுதல் பசி இருந்து கொண்டிருக்கிறது. அந்த தேடுதல் 2026 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக அமையப்போகிறது. இவர்கள் வெளிநாடு சென்று படித்து கற்றுக் கொள்ளக்கூடிய அமைப்பு உண்டாகும்.

இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று இந்த 3 தவறுகளை செய்து விடாதீர்கள்

இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று இந்த 3 தவறுகளை செய்து விடாதீர்கள்

மகரம்:

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்ததை சரியான நேரத்தில் செய்யக்கூடிய ஒரு ஆண்டு என்றால் அது இந்த 2026 ஆம் ஆண்டு தான். உங்களுக்கு வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். நிச்சயம் நீண்ட நாட்கள் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் இருந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து மகிழ்ச்சியுண்டாகும்.

கும்பம்:

தொழில் என்று எடுத்துக்கொண்டால் கும்ப ராசியினர் தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு அதை உங்கள் தொழில் வாழ்க்கையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவதற்கான பாதையை தேர்ந்தெடுக்க இவர்களுக்கு கைகொடுக்கும்.

மீனம்:

இந்த வருடம் உங்களுடைய படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வு மிக சிறப்பாக உங்களை வழிநடத்தக்கூடிய ஆண்டாக இருக்க போகிறது. இந்த ஆண்டு செய்யக்கூடிய ஒவ்வொரு வேலைகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US