ஒரே நாளில் 3 விசேஷங்கள்- நாளைய தினம் இந்த வழிபாடு செய்ய மறக்காதீர்கள்

By Sakthi Raj Dec 03, 2025 11:36 AM GMT
Report

  பௌர்ணமி என்றாலே இறை வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். அப்படியாக 2026 ஆம் ஆண்டு டிசம்பர் நான்காம் தேதி பௌர்ணமி தினம் வருகிறது. இன்றைய நாள் நாம் குலதெய்வ வழிபாடு, சத்யநாராயண பூஜை செய்வது மேலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போன்றவை மிகவும் நற்பலன்களை கொடுக்கும்.

ஆனால் மற்ற மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமியை விட இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி கூடுதல் சக்தி வாய்ந்ததாகும். அதிலும் இந்த ஆண்டு இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது.

காரணம் இந்த நாளில் தான் உலக ஜீவராசிக்கு ஆதாரமாக திகழும் உணவின் தெய்வமாக போற்றி வழிபாடு செய்யும் அன்னபூரணி ஜெயந்தி, முப்பெரும் தேவர்களும் ஒருங்கிணைந்த வடிவமாக திகழும் தத்தாத்ரேயர் ஜெயந்தி, கவசமாக நின்று காக்கும் பைரவி ஜெயந்தி ஆகியவை ஒரே நாளில் வருகிறது.

ஒரே நாளில் 3 விசேஷங்கள்- நாளைய தினம் இந்த வழிபாடு செய்ய மறக்காதீர்கள் | 2025 Annapurnajeyanti Worship And Mantras To Chant

மாதவிடாய் ஆன பெண்கள் இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றலாமா?

மாதவிடாய் ஆன பெண்கள் இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றலாமா?

ஆக இத்தனை சிறப்புகள் கொண்ட நாளைய தினத்தை மறக்காமல் வழிபாடு செய்வது அவசியம். அப்படியாக நாளைய தினம் அன்னபூரணி ஜெயந்தியை அடுத்து அன்னபூரணி தேவியை மனதார வழிபாடு செய்து "ஓம் அன்னபூர்ணாயை நமஹ" 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் நம்முடைய வீடுகளில் உள்ள துன்பங்கள் விலகும்.

அதோடு அன்றைய தினம் பசியோடு இருக்கக்கூடிய ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்கினால் நமக்கு கூடுதல் புண்ணியம் சேரும். இதனால் நம்முடைய ஏழு தலைமுறையினர் செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.

இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று இந்த 3 தவறுகளை செய்து விடாதீர்கள்

இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று இந்த 3 தவறுகளை செய்து விடாதீர்கள்

குடும்பத்தில் வறுமை என்ற பெயருக்கே இடம் இருக்காது. மேலும் நாளைய தினம் நம்முடைய சமையலறையை நன்றாக சுத்தம் செய்து அன்னபூரணி படம் அல்லது சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆரோக்கியம் பொருளாதார சிக்கல் எல்லாம் விலகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US