மாதவிடாய் ஆன பெண்கள் இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றலாமா?
12 மாதங்களில் கார்த்திகை மாதம் நிறைய ஆன்மீக சிறப்புகள் கொண்ட மாதமாகும். இந்த மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டு இறைவன் நமக்கு ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார்.
மேலும் நாம் தினமும் வீடுகளில் 3, 5 என்ற எண்ணிக்கைகளில் தான் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். ஆனால் திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றிய பிறகு நம்முடைய வீடுகளில் முடிந்த அளவிற்கு 27 எண்ணிக்கைகளில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
27 எண்ணிக்கை என்பது 27 நட்சத்திரத்தைகுறிக்கக் கூடியது. மேலும் திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று வீடுகளில் எல்லா இடங்களிலும் விளக்கேற்றுவது என்பது நம்முடைய வீடுகளில் கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள் எதிர்மறை ஆற்றல்கள் தீமைகள் அனைத்தும் விலக ஆசீர்வாதமாக அமையும்.

அப்படியாக பெண்களுக்கு இந்த கார்த்திகை திருநாள் என்பது மிகவும் ஆவலுடன் காத்திருக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு இன்று மாதவிடாய் வந்துவிட்டது என்றால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருப்பார்கள். எவ்வாறு விளக்கு ஏற்றுவது? விளக்கு ஏற்றலாமா? என்ற நிறைய சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மாதவிடாய் வந்துவிட்டது என்றால் கவலை கொள்ளாமல் பூஜை அறைகளில் குடும்பத்தினரை விளக்கேற்றி சுவாமி படத்திற்கு மாலை அணிவித்து வழிபாடு சொல்லலாம். பிறகு வீடுகளை சுற்றி பிற இடங்களில் நீங்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். முடிந்தவர்கள் கட்டாயமாக ஒரு ஐந்து அகல் விளக்குகளை புதிதாக வாங்கி தனியாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது மாதவிடாய் காலங்களில் இவ்வாறு திருக்கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது என்றால் அந்த விளக்குகளை தனியாக நீங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம். இது ஐந்து என்ற எண்ணிக்கை உங்களுடைய வசதிக்கேற்ப நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால் இவ்வாறு ஏற்றக்கூடிய விளக்குகளை மீண்டும் பிற பூஜைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதை போல் வேறு ஒரு வருடம் மாதவிடாய் காலங்கள் வரும்பொழுது அந்த விளக்குகளை நீங்கள் பயன்படுத்தி வழிபாட்டிற்கு வைத்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் வந்துவிட்டது என்று கவலை கொள்ளாமல் நிச்சயம் முடிந்த அளவிற்கு இந்த முறையில் வழிபாடு செய்து இந்த கார்த்திகை திருநாளை சிறப்பாக கொண்டாடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |