சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாள் எது தெரியுமா? தவறவிடாதீர்கள்
ஒருமுறை பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும் சிவபெருமானும் பார்வதி தேவியும் கைலாய மலைக்கு திரும்புகின்றனர். அப்பொழுது பார்வதி தேவி சிவபெருமானை பார்த்து ஈசனே உங்களை வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள் எது என்று கேட்கிறார்? அதற்கு சிவபெருமான் மாசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் (தேய்பிறைச் சதுர்த்தசி) எனக்கு விருப்பமான நாள் என்று கூறுகிறார்.
அந்த தினத்தை தான் நாம் இன்று மகா சிவராத்திரி ஆக கொண்டாடுகிறோம். அன்றைய நாளில் நாம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் போது நமக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கிறது.

மேலும், மகா சிவராத்திரி அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணிக்குள் கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடத்த வேண்டும் என்றும், பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார். இதை கேட்டுக்கொண்ட பார்வதி தேவி தன்னுடைய தோழியர்களிடம் சொல்கிறார்.
அவர் பூலோக மக்களிடம் தெரிவிக்கிறார். இதன் பின் கோவில்களில் சிவராத்திரி வழிபாடு தொடங்குகிறது. இந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வது மிக உகந்ததாக இருக்கிறது. அவர் வழிபாடு செய்யும்பொழுது அவருடைய பரிபூரண அருளை பெறலாம்.
சிவராத்திரியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்:
சிவராத்திரி சிவபெருமானுக்கு விருப்பமான நாள் என்று சிவபெருமானே சொல்லி இருக்கிறார். அன்றைய நாளில் நாம் விரதமிருந்து வழிபாடு செய்யும்பொழுது நம் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மன அழுத்தம் நீங்குகிறது.

நீண்ட நாட்களாக ஆன்மா தேடிக் கொண்டிருக்கின்ற தேடுதலுக்கு விடை கிடைக்கிறது. அடக்கமும் ஒழுக்கமும் மேம்படுகிறது. நம்முடைய ஆயுள் அதிகரிக்கிறது. நம்முடைய ஆத்ம பலம் சிவபெருமானுடைய அருளால் பெருகுகிறது. இதையெல்லாம் விட முக்கியமாக நம்முடைய விருப்பம் நிறைவேறுவதோடு சிவபெருமானின் முழு அருள் நமக்கு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |