2026 முழுவதும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கனும் - எந்த ராசியெல்லாம் தெரியுமா?
2026-ஆம் ஆண்டு முழுவதும் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் கேது; மேஷம், ரிஷபம் உட்பட 5 ராசியினரின் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதாகவும், சிரமங்களை கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேஷம்
குழந்தை தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவார்கள், போட்டி தேர்வுகளில் தோல்வி தழுவுவார்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அவ்வப்போது சண்டைகள், வாக்குவாதங்கள் வந்துச் செல்லும். மன அமைதி பாதிக்கப்படும், அலைச்சல் மற்றும் பதற்றமும் அதிகரிக்கும். பணச்செலவு அதிகரிக்கும்.
ரிஷபம்
பூர்வீக சொத்து கிடைப்பதில் தாமதம் உண்டாகும், உங்கள் உரிமையான சொத்துக்களை பெறுவதில் சிரமங்கள் உண்டாகும். நிதி சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும், உடன் பிறந்தவர்கள் இடையே தேவையற்ற மனஸ்தாபங்கள் மற்றும் பிரச்சனைகளும் அதிகரிக்கும். பொருட்செலவு மற்றும் பணச்செலவுகள் அதிகரித்து காணப்படும்.
கன்னி
மருத்துவ செலவுகளை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்கள் உங்கள் சேமிப்பை குறைக்கும். குடும்ப உறவுகளுடன் காணப்படும் மனஸ்தாபங்கள், உங்களை தனிமையில் இருக்க தூண்டும். இரவு உறக்கத்தை பாதிக்கும், மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
தனுசு
நிதி நிலை கடுமையாக மோசமடையும். மோட்டார் சைக்கிள் பயணங்கள், விபத்துக்களை உண்டாக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு காணப்படலாம். குடும்ப வாழ்க்கையில் உங்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் காணப்படலாம்.
கும்பம்
திருமண வாழ்க்கையில் தடைகளை உண்டாக்கும். விரைவில் கைகூட இருந்த திருமணம் சற்று தள்ளிப்போகும். நிதி பிரச்சனைகள் அதிகரிக்கும், கடன் பிரச்சனைகளும் அதிகரிக்கும். மன அழுத்தத்தை உண்டாக்கும் விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும்.