2026: வடதிசையை நோக்கி செல்லும் புதன்.. தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் ராசிகள் யார் ?
ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக இருக்கக் கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும். புதன் பகவான் தான் ஒரு மனிதனுக்கு நல்ல அறிவாற்றல், படிப்பு, கணக்கு வழக்கு, எழுத்து போன்றவற்றுக்கு காரணியாக இருக்கிறார்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு புதன் பகவான் வடதிசை நோக்கி பயணிக்கும் உத்தராயன காலம் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் யோகத்தையும் எதிர்பாராத பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் வாய்ப்புகளையும் கொடுக்க உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசி அதிபதி புதன் பகவான் ஆவார். ஆதலால் இவர்கள் வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்கப் போகிறது. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த இடத்தில் இடமாற்றத்தை பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு புதிய நட்புகளின் வழியாக தொழிலில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். ஆதலால் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக ஒரு நல்ல சாதகமான பலனை கொடுக்கப் போகிறது.
இவர்களுக்கு எதிர்ப்பாராத நேரத்தில் பதிவு உயர்வு மற்றும் நினைத்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வாடிக்கையாளர்களின் வருகைகள் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. வெளிநாடு மற்றும் வெளியூர் சென்று படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு நினைத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நல்ல முடிவை பெறும். உங்களுடைய சமூக வட்டம் விரிவடையும் தொடர்புகள் வழியாக முன்னேற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |