2026: அட்சய திருதியை அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்பவர்கள் கவனத்திற்கு..
நம்முடைய இந்து மத பண்டிகைகளில் அட்சய திருதியை திருநாள் மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச வீடுகளில் இடம் பெற்றிருப்பார்கள். ஆதலால் இந்த இரண்டு கோள்களின் ஆசிர்வாதத்தால் மங்களகரமான சில விஷயங்களை செய்வதால் பல மடங்கு பலன் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், இந்த நாள் மிகவும் மங்களகரமான நாள் என்பதால் சிறப்பு முகூர்த்த நேரத்தை நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதனால் பலரும் தங்களுடைய கிரகப்பிரவேசத்தை அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.
அப்படியாக, அன்றைய நாள் கிரகப் பிரவேசம் செய்ய நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

கிரகப்பிரவேசத்திற்கான நல்ல நேரம்:
சித்திரை மாதத்தில் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது . அட்சய திருதியை அபிஜித் முகூர்த்தம் என்று கருதப்படுகிறது. அதாவது இந்த நாளில் கிரகப்பிரவேசம் நடத்துவதற்கு தனியாக எந்த ஒரு சுபகாரிய நேரத்தையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது முகூர்த்தமானது ஏப்ரல் 19 அன்று காலை 11:55 மணி முதல் பிற்பகல் 12. 45 மணி வரை இருக்கிறது.
கிரகப்பிரவேசத்தில் கடைபிடிக்க வேண்டியவை:
1. கிரகப்பிரவேசத்திற்கு முன்பு வாஸ்து சாந்தி செய்ய வேண்டும். அதாவது புதிய வீட்டிற்குள் நுழையும் முன் நவகிரக பூஜை மற்றும் ஒரு ஹோமம் நடத்துவது அவசியமாகும். கிரகப்பிரவேச நாளன்று நீர் அல்லது பால் நிரப்பப்பட்ட ஒரு கலசத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
2. கிரகப்பிரவேசம் பொழுது வீட்டில் முக்கிய நுழைவாயிலில் தோரணங்கள் மலர்கள் மற்றும் கோலம் ஆகியவற்றை கொண்டு அலங்கரிப்பது அவசியமாகும். இவை வீட்டிற்கு நல்ல செல்வ செழிப்பையும் நேர்மறை ஆற்றலையும் பெற்றுக் கொடுக்கும்.
3. அதேபோல் கிரக பிரவேசித்தேன் பொழுது வீட்டிற்குள் நுழையும் வேளையில் கணவனும் மனைவியும் தங்களுடைய வலது காலை நிலைபடியில் உள்ளே எடுத்து வைக்க வேண்டும். அவை ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்கும்.

4. கிரகப்பிரவேசம் முடிந்த உடன் சமையல் அறையில் அடுப்பை ஏற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும் அல்லது வீடுகளில் ஏதேனும் இனிப்புகள் செய்து குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.
5. கிரகப்பிரவேசத்தின் பொழுது பிராமணர்களுக்கு அன்னமிடுதலும் தட்சனை அளித்தலும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நேர்மறை ஆற்றலும் நம்முடைய வளர்ச்சியும் உண்டாகும்.
6. வீட்டில் மாலை நேரங்களில் பிரதான நுழைவாயிலில் ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். இவை இல்லத்திற்கு மகிழ்ச்சிகளையும் செழிப்பையும் உண்டு செய்யும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |