2026: சுக்கிரன் ஆட்சியால் தூள் கிளப்பப்போகும் மகர ராசியினர்.. நவம்பர் மாதம் எப்படி இருக்கிறது?

By Sakthi Raj Oct 24, 2026 04:53 AM GMT
Report

 சனி பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மகர ராசியினருக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு நவம்பர் மாதம் அழகு சாதனங்கள், டிராவல்ஸ் மற்றும் வாகனம் தொழில் செய்பவர்களுக்கு ஒரு சிறப்பான பலன்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது.

காரணம், இவர்களுக்கு சுக்கிரன் வலுவாக இருப்பதால் வருமானம்பெருகக்கூடிய காலகட்டமாகும். யாரேனும் சட்ட ரீதியான பிரச்சினைகள் அல்லது அலுவலக தொல்லைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக நவம்பர் 18ஆம் தேதிக்கு பிறகு நல்ல தீர்வு கிடைக்கும்.

அதேபோல், குரு பகவான் எட்டாம் இடத்தில் மறைந்திருப்பது ஒரு விபரீத ராஜயோகமாக கருதப்படுவதால் இது இந்த மாதம் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான பலனை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. இந்த மாதம் தேவை இல்லாத அரசியல் விவாதங்கள் தவிர்ப்பது நல்லது.

கடவுளே கதி என்று எப்பொழுதும் இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

கடவுளே கதி என்று எப்பொழுதும் இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

அதேபோல், சமூக வலைத்தளங்களில் மற்றவர்களுடைய கருத்துக்கு விமர்சிப்பதையோ அல்லது ஒருவருடைய கருத்துக்களை பகிர்வதையோ இந்த காலகட்டம் தவிர்ப்பது உங்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பாக அமையும்.

மேலும், இவர்கள் இந்த காலகட்டம் ஒரு சிறப்பான பலனை பெறுவதற்கு சூரிய நாராயணரை வணங்குவது சிறப்பு. அது இவர்களுக்கு சிக்கல்களை கடந்து ஒரு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.

மகர ராசியினருக்கு இந்த நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US