இது தெரிந்தால் சனியை கண்டு பயப்பட மாட்டீர்கள்... வெற்றியை வாரி வழங்கும் சனி

By Sakthi Raj Oct 24, 2026 06:21 AM GMT
Report

பொதுவாக, சனி பகவான் என்றால் எல்லோரும் பயப்படுவதுண்டு. அதாவது சனி என்றாலே அவர் துன்பம் கொடுக்கக் கூடியவர். சனி என்றாலே அவரால் நாம் நிறைய கஷ்டங்களை சந்திக்கும் வேண்டிய நிலை வரும் என்றுதான் நான் நினைக்கின்றோம்.

ஆனால், மனிதர்கள் மேலோட்டமாக அந்த விஷயத்தை அணுகுகின்ற பொழுதுதான் இந்த துன்பங்கள் எல்லாம் வருகிறது. உண்மையில், சனி பகவான் எவ்வாறு செயல்படுகிறார் என்று தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் வளர்ச்சியை நோக்கியும், வாழ்க்கையில் ஒரு நல்ல அணுகுமுறையை வளர்த்துக் கொள்வதற்கும் நாம் தயாராகி விடுவோம்.

இது தெரிந்தால் சனியை கண்டு பயப்பட மாட்டீர்கள்... வெற்றியை வாரி வழங்கும் சனி | Saturn Blessings The Secret Behind Success

அதிர்ஷ்டம் பெற 12 நட்சத்திரக்காரர்களும் வழிபாடு செய்ய வேண்டிய பைரவர் ஆலயங்கள்

அதிர்ஷ்டம் பெற 12 நட்சத்திரக்காரர்களும் வழிபாடு செய்ய வேண்டிய பைரவர் ஆலயங்கள்

அது அதாவது ஒரு நல்ல மாணவராக இந்த உலகம் என்கின்ற வகுப்பில் வெற்றி அடைய சனி பகவான் நம்மை தேர்ச்சி பெற செய்கிறார். அப்படியாக, சனி பகவான் கொடுக்கக்கூடிய எந்த ஒரு கஷ்டங்களாக இருந்தாலும் அந்த கஷ்டமானது அந்த நபரின் வாழ்க்கையில் தேவையில்லாத ஒன்றை விளக்குவதாகவே இருக்கும்.

அல்லது அவர்கள் தவறாக புரிந்து கொண்ட ஒரு விஷயத்திற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கக் கூடியதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் சனிபகவான் சில நேரங்களில் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள் அவர்களுடைய உயிரை பாதுகாக்க கூடியதாகவும் அமைகிறது என்று நாம் சொல்லலாம்.

பல நபர்கள் கஷ்டங்களுக்குப் பிறகு உயர்ந்த நிலைக்கு வருகிறார் என்று சொல்கிறோம் அல்லவா அதற்கெல்லாம் சனி பகவான் தான் காரணம்.

அதாவது சனிபகவான் முதலில் கஷ்டம் என்கின்ற ஒரு நிலையை கொடுத்து அதில் அவர்களுக்கு உண்மையை அறியச் செய்து அந்த வழியாக அவர்களை கண்டறிய செய்து பிறகு அவர்கள் வாழ்க்கையில் எதை அடைய ஆசைப்படுகிறார்களோ அதை நோக்கி அவர்களை நகர்த்தி கூட்டி செல்கிறார்.

இது தெரிந்தால் சனியை கண்டு பயப்பட மாட்டீர்கள்... வெற்றியை வாரி வழங்கும் சனி | Saturn Blessings The Secret Behind Success

2026: சுக்கிரன் ஆட்சியால் தூள் கிளப்பப்போகும் மகர ராசியினர்.. நவம்பர் மாதம் எப்படி இருக்கிறது?

2026: சுக்கிரன் ஆட்சியால் தூள் கிளப்பப்போகும் மகர ராசியினர்.. நவம்பர் மாதம் எப்படி இருக்கிறது?

இதுதான் சனி பகவானுடைய செயலாக இருக்கிறது. கஷ்டம் என்று வருகின்ற பொழுது நீங்கள் துவண்டு போக தேவையில்லை. இங்கு எல்லோருமே வகுப்பில் நல்ல மாணவர்களாகவே இருக்க விரும்புகின்றோம்.

ஆக, சனி பகவான் கொடுக்கக் கூடிய அந்த கஷ்ட காலங்களில் அவரை ஆசிரியராக எடுத்துக்கொண்டு கஷ்டங்களில் நாம் எவ்வாறு மீண்டு வருவது என்றும் இந்த உலகத்தில் எப்படி சிறந்த மாணவனாக ஒரு நல்ல சிந்தனையோடும் எண்ணங்களோடும் செயலோடும் வாழ வேண்டும் என்று அதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் நிச்சயம் சனி பகவான் மிகப்பெரிய சிம்மாசனத்தில் உங்களை அமர வைப்பார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US