2026: பிரபல ஜோதிடர்கள் கணித்து சொல்லும் சித்திரை புத்தாண்டு ராசி பலன்கள்

By Sakthi Raj Apr 14, 2026 07:17 AM GMT
Report

ஜோதிடத்தில் சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷ ராசியில் உச்சமாக இருப்பார். சூரியன் உச்சம் பெறுகின்ற இந்த மாதம் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அப்படியாக, சூரிய பகவான் மேஷ ராசியில் இருக்கின்ற அந்த தினத்தை தான் நம் சித்திரை தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றோம்.

அந்த வகையில், இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது? இன்னும் சிறிது நாட்களில் குரு பெயர்ச்சி வர இருக்கின்றதால் அந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான மாற்றத்தை உலகளாவிய மக்களிடையே கொண்டு வந்து சேர்க்க போகிறது என்று எல்லோருக்கும் நிறைய குழப்பங்கள் இருக்கும்.

அதாவது மேஷ ராசியை எடுத்துக் கொண்டால் இவர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக நிறைய வாய்ப்புகள் வந்தாலும் இவர்கள் பணம் தொடர்பான விஷயங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டிய நிலை இருக்கிறது.

2026: பிரபல ஜோதிடர்கள் கணித்து சொல்லும் சித்திரை புத்தாண்டு ராசி பலன்கள் | 2026 Chithirai Tamil Newyear Astrology Prediction

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

ரிஷப ராசியினருக்கு பொன்னான காலமாகவே இருக்கிறது. இருப்பினும் மாணவர்களுக்கு கவன சிதறல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மிதுன ராசியினருக்கு மனதளவில் நிறைய குழப்பங்கள் இருக்கும். திருமண வாழ்க்கை தொடர்பான நிறைய மன அழுத்தத்தை சந்திக்க கூடும்.

கடக ராசியினரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் அதற்கு இணையாக செலவுகளும் அவர்கள் சந்திக்க உள்ளது.

சிம்ம ராசியை எடுத்துக்கொண்டால் இவர்களுக்கு இந்த காலகட்டம் அரசியல் தொடர்புகள் அதிகம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இருப்பினும் இவர்கள் அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் கவனத்தோடு செயல்படாவிட்டால் மிகப்பெரிய சிக்கல்களில் சிக்குவதற்கான சூழல் உருவாகும்.

அப்படியாக 12 ராசிகளுக்கும் தமிழ் புத்தாண்டு முதல் எப்படி இருக்க போகிறது? என்று நம்முடைய குழப்பங்களையும் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் பிரபல ஜோதிடர்கள் 12 ராசிகளுக்கான புத்தாண்டு கணிப்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியால் பார்ப்போம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US