18 வருஷத்திற்கு பிறகு உருவாகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. கேதுவால் பொற்காலம் யாருக்கு?
வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் வாழ்க்கையில் உயர்ந்த முன்னேற்றம் ஆகியவைற்றை வழங்கக்கூடியவர் கேது பகவான் தான்.
அந்த வகையில், கேது பகவான் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த நிகழ்வு 2028 ஆம் ஆண்டு வரை உள்ளது. அதாவது கடகத்தில் கேது பகவான் சுமார் 18 மாதம் இருக்கப்போகிறார்.
இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் திருப்பு முனையும் கொண்டு வரும். குடும்பத்தில் அதிர்ஷ்டமும், திடீர் வாய்ப்புகள் தேட வரப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு கேதுவின் இந்த மாற்றம் இவர்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த காலகட்டங்களில் எதிர்பாராத வாய்ப்புகளும், எதிர்பார்த்த விஷயங்களும் தடை இன்றி நடக்கும். மேலும், பூர்வீக தொடர்பான தடைகள் எல்லாம் இவர்களுக்கு விலகி செல்லும்.
கன்னி:
கன்னி ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகளை போக்கப்போகிறது.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் தேடி வரப்போகிறது. இருப்பினும் பொருளாதார தொடர்பான விஷயங்களில் மிகவும் நிதானமாக கையாள்வது அவசியம்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெயரும் புகழும் கிடைக்கபோகின்றது. வேலையில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு பெறவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கலை துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம் தேடி வரப்போகிறது. இருப்பினும் வேலையில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேசுவது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |