2026: தீபாவளிக்கு முன்பு உருவாகும் கஜகேசரி ராஜ யோகம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் யாருக்கு?

By Sakthi Raj Oct 17, 2026 11:49 AM GMT
Report

ஜோதிட ரீதியாக குருவும் சந்திரனும் இணையக்கூடிய அமைப்பு மிகவும் அற்புதமான பலனை தரக்கூடியதாக இருக்கிறது. இதனை குரு சந்திர யோகம் கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும், அந்த கிரகங்கள் அமைந்திருக்க கூடிய இடத்தை பொருத்தும் சில ராசிகளுக்கு புத்திசாலித்தனம், வளர்ச்சி, ஆன்மிகத்தின் மீதான நம்பிக்கைகள் மற்றும் செல்வ செழிப்பை தரக்கூடியதாக அமைகிறது.

அப்படியாக, 12 ராசிகளில் யார் இந்த யோகத்தால் மிகப்பெரிய அளவில் நன்மையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

2026: தீபாவளிக்கு முன்பு உருவாகும் கஜகேசரி ராஜ யோகம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் யாருக்கு? | 2026 Diwali Gajakesari Rajyoga Bring Good Luck

ஜாதகத்தில் கேது பகவான் மூன்றாம் இடத்தில் இருந்தால் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா?

ஜாதகத்தில் கேது பகவான் மூன்றாம் இடத்தில் இருந்தால் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகமானது இவர்கள் செய்யக்கூடிய தொழிலில் மிகப்பெரிய அளவில் புதிய வாய்ப்புகளை பெற்று கொடுக்கப்போகிறது.

வேலை தொடர்பாக பணியிடங்களில் உங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் பிறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலை எல்லாம் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு குரு சந்திரன் ராஜயோகமானது இவர்களுக்கு மிகவும் நன்மையை கொடுக்கப் போகிறது. பொருளாதார ரீதியான நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.

புதிய வருமானம் பெறுவதற்கான வழியை கண்டறிவீர்கள். தொழில் வியாபாரம் என எந்த துறைகளிலும் நீங்கள் அதில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

2026: துர்காஷ்டமி எப்பொழுது? அக்டோபர் 18 வது 19 ஆ? பூஜை உகந்த நேரம் என்ன?

2026: துர்காஷ்டமி எப்பொழுது? அக்டோபர் 18 வது 19 ஆ? பூஜை உகந்த நேரம் என்ன?

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு சந்திரன் யோகமானது மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு வேலை ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

உயர் அதிகாரிகள் இவர்களுடைய திறமையை பாராட்டுவார்கள். புதிய பொறுப்புகள் அல்லது திட்டங்கள் இவர்களுக்கு தொழில் வளர்ச்சியை அமோகமாக கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகமானது இவர்களுக்கு தந்தை வழியே ஒரு நல்ல ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போகிறது.

தந்தையின் முழு ஆதரவையும் அனுபவசாலிகளின் ஆலோசனையை இவர்கள் இந்த காலகட்டங்களில் பெறப்போகிறார்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்த திட்டமும் முயற்சிகளும் இந்த காலகட்டங்களில் வெற்றி பெற போகிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US