2026-ல் பிப்ரவரி மாதம் கிரகண யோகத்தால் 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுடைய மாற்றமானது ஒவ்வொரு தனிநபர் வாழ்க்கையிலும் தாக்கம் உண்டு செய்யும். அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி மாதம் வானியல் மற்றும் ஜோதிட கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானதாக மாதமாகும்.
வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று சூரிய கிரகணம் மற்றும் கிரகங்களின் குறிப்பிட்ட சில நிலைகள் கிரகண யோகத்தை உருவாக்க இருக்கிறது. ராகு அல்லது கேதுவின் செல்வாக்கில் ஒரு கிரகம் சிக்கும் பொழுது அல்லது கிரகண நிலை ஏற்படும்பொழுது அதை கிரகண யோகம் என்று அழைக்கிறார்கள்.
இந்த யோகத்தின் விளைவை நாம் நம்முடைய மனம் உடல் மற்றும் பொருளாதாரத்தில் பார்க்கலாம். அப்படியாக இந்த கிரகண யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சோதனையான காலமாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மகரம்:
மகர ராசியினருக்கு உடல்நலம் இந்த காலகட்டங்களில் பாதிப்பு அடையலாம். குறிப்பாக கண் மற்றும் வயிறு தொடர்பான வியாதிகளை இவர்கள் சந்திப்பார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு சில தடை தாமதம் வரும். மேலதிகாரிகளுடன் ஒரு நல்ல உறவு நிலை இல்லாமல் போகலாம். ஆதலால் சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு கருப்பு எள் தானம் வழங்கும் பொழுது இதனுடைய பாதிப்பு குறையும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சூரியன் மற்றும் கேதுவின் நிலை கிரகண யோகத்தை இன்னும் அதிக அளவில் வலுப்படுத்துகிறது. உங்கள் மனதில் தேவையில்லாத பயம் பதட்டம் இந்த காலகட்டங்களில் உருவாகும். தேவை இல்லாத மோசடிகளில் நீங்கள் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். திருமண வாழ்க்கையில் துணையுடன் அமைதியான சூழலை கொண்டு செல்லுங்கள். இறைவழிபாடும் உங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றும்.
மீனம்:
மீன ராசியினருக்கு பிப்ரவரி மாதம் கடைசி 15 நாட்கள் பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய சிரமத்தை கொடுக்கும். வீடுகளில் எதிர்பாராத அளவில் செலவுகள் அதிகரிக்கும். திடீரென்று கடன் வாங்கக்கூடிய நிலை உருவாகும் எதிரிகள் தொல்லை அதிகரிக்க கூடிய காலகட்டமாக இருக்கிறது. உங்களுடைய நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஒரு சில பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேரலாம். பயணத்தின் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |