2026: வக்ர நிலை அடையும் புதன் பகவான்.. ராஜ வாழ்க்கை வாழப் போகும் 4 ராசிகள்
ஜோதிடத்தில் புதன் பகவான் தான் ஒருவருடைய எழுத்து, பேச்சு, படிப்பு, கணக்கு போன்றவைக்கு காரணமாக இருக்கிறார். அவர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
அவர் மார்ச் 21 ஆம் தேதி வரை அந்த நிலையில் இருக்கிறார். இந்த காலகட்டம் பல ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலனை கொடுக்க போகிறது. இதனால் எந்த ராசியினர் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பேச்சுத் திறனால் எல்லாவற்றையும் சாதிக்க கூடிய நிலை உண்டாகும். வழக்கறிஞராக இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் நிச்சயம் வெற்றியை தேடி கொடுக்கும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனை விலகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு புதன் வக்ரப் பெயர்ச்சியானது இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்க போகிறது. அலுவலகத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை உயரும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகி ஒரு நல்ல மாற்றம் பெறக்கூடிய காலம்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு புதன் வக்ரப் பெயர்ச்சியானது வாழ்வில் நேர்மறையான எண்ணங்களை கொடுக்கப்போகிறது. கல்வி, அறிவு போன்ற எல்லா விஷயங்களிலும் இவர்கள் சிறந்து விளங்க போகிறார்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் தேடி வந்து குவிய போகிறது.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த காலகட்டங்களில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் வேலையில் கிடைக்கப் போகிறது. எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு மற்றும் நீண்ட நாள் தடைபட்ட பணவரவுகள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். நண்பர்கள் வட்டம் விரிவடையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |