தவறியும் தெற்கு திசை சுவரில் இந்த புகைப்படம் மாட்டாதீர்கள்.. ஆபத்து நிச்சயம்
வாஸ்து சாஸ்திரப்படி நம்முடைய வீட்டின் சுவரில் துவங்கி நாம் வைத்திருக்கக்கூடிய பொருட்கள் வரை மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டு இருக்கிறது. வாஸ்துவில் நிலைத்தன்மை, ஒழுக்கம் உறுதியான முடிவுகளை குறிக்கக்கூடிய திசையாக தெற்கு திசை கருதப்படுகிறது. ஆக இந்த திசையில் நாம் புகைப்படங்கள் மாட்டலாமா? கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.
வாஸ்து ரீதியாக தெற்கு திசையில் சரியான புகைப்படங்கள் வண்ணங்கள் அல்லது வால் பேப்பர்கள் இந்த சுவரில் ஒட்டும் பொழுது மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் தொழிலின் முன்னேற்றத்திற்கு உதவக் கூடியதாக அமையும்.

அதனால் தெற்கு திசையை வெறுமனே நாம் அசுபமாக கருதுவதை தவிர்த்து மகிழ்ச்சி மற்றும் அமைதியை பெற சரியாக திட்டமிட்டு செய்வது முக்கியம். ஆக தெற்கு திசை என்பது ஒரு மனிதனுக்கு நம்பிக்கையும் வாழ்க்கையில் திசை தடுமாறி செல்லாமல் ஒரு நல்ல முடிவையும் எடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
அதனால் இந்த திசையில் நேர்மறை ஆற்றலை பெருக்க கூடிய வண்ணங்கள் அல்லது புகைப்படங்களை ஒட்ட வேண்டும். புகைப்படங்கள் ப்ளாக் ஆண்ட் ஒயிட் இருந்தால் அவை நம் வீட்டினுடைய சூழ்நிலையை மாற்றி அமைத்து விடும். சமயங்களில் வேலையில் சிரமங்கள், மனக்கசப்புகள் போன்றவை சந்திக்கக்கூடும்.

அதனால் தெற்கு திசையில் முடிந்த வரை அழுகை, சோகம் அல்லது எதிர்மறை முயற்சிகளை தூண்டக்கூடிய எந்த ஒரு புகைப்படங்களும் ஒட்டாதீர்கள். சண்டையிடக்கூடிய விலங்குகள், போர் காட்சிகள், மோதல்கள் போன்ற படங்கள் அழகான புகைப்படமாக இருந்தாலும் அதை தெற்கு திசை சுவரில் மாற்றுவதை தவிர்த்து விடுங்கள்.
அதேபோல் நீர் தொடர்பான புகைப்படங்கள் சூரியன் மறையும் படங்கள் ஆகிவற்றையும் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |